விஜய் சேதுபதி வெளியிட்ட ‘திட்டம் இரண்டு’ ஃபர்ஸ்ட் லுக்!

 

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘திட்டம் இரண்டு’ ஃபர்ஸ்ட் லுக்!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் ‘திட்டம் இரண்டு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தரமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்,  தன்னை இயக்குநரின் நாயகி என்று கூறிக் கொள்ளும் ஐஸ்வர்யா, கதையின் நாயகியாகவே திகழ்கிறார். ‘காக்கா முட்டை’ படத்தில் வடசென்னை பெண்ணாக, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார். வடசென்னை மக்களின் வாழ்க்கை முறை பற்றிய படத்தில்  ’பத்மா’ கதாபாத்திரத்தில் சிரமமே இல்லாமல் நடித்து பெயர் வாங்கி சென்றார். அதேபோல் கனா  படமும் ஐஸ்வர்யா ராஜேஷை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. இருப்பினும் சாமி 2, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள்  அவருக்கு சுமாராகவே அமைந்தது.குறிப்பாக  நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்தியின் தங்கையாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

 

 

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவருடைய நடிப்பில் தமிழில் ‘க/பெ ரணசிங்கம்’, ‘துருவ நட்சத்திரம்’, ‘இது வேதாளம் சொல்லும் கதை’, ‘இடம் பொருள் ஏவல்’ மற்றும் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து வரும் படம் ஆகியவை வெளியாக உள்ளன. தெலுங்கில் நானி நடிக்கவுள்ள ‘டக் ஜெகதீஷ்’ படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘Yours Shamefully’ என்ற குறும்படத்தின் இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கும்  ‘திட்டம் இரண்டு’  என்ற படத்தில் நடித்துவருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தை தினேஷ் கண்ணன் மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில், பொதுமுடக்கத்திற்கு பிறகு அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.