விஜய் சேதுபதி, யுவன் பேரு எங்கப்பா காணோம்? கோடி கணக்குல கொடுத்தவங்கள மறந்துட்டாரா ‘சிந்துபாத்’ தயாரிப்பாளர்?

 

விஜய் சேதுபதி, யுவன் பேரு  எங்கப்பா காணோம்? கோடி கணக்குல கொடுத்தவங்கள மறந்துட்டாரா  ‘சிந்துபாத்’ தயாரிப்பாளர்?

சிந்துபாத் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் வெளியாகியுள்ள நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.என். ராஜராஜன் பலருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

சிந்துபாத் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் வெளியாகியுள்ள நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.என். ராஜராஜன் பலருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குநர்  அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அவரின் மகன் சூர்யா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த சிந்துபாத் படம் பல பிரச்னைகளுக்கு பிறகு ஒரு வழியாக கடந்த 27 ஆம் தேதி ரிலீஸானது. முன்னதாக ‘சிந்துபாத்’ படமும் ஃபைனான்ஸ் சிக்கலில் தவிக்க விஜய் சேதுபதி இருமுறை பெரிய தொகைகள் கொடுத்து உதவினார்.  ஆனாலும் பிரச்சினைகள் தீராத நிலையில் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பாளரைக் கடன் சுமையிலிருந்து மீட்க ஒரு கோடி ரூபாய் கொடுத்து உதவினார்.  இப்படி பல சிக்கலுக்கு பிறகு சிந்துபாத் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.என். ராஜராஜன்  பட வெளியாக உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பேரன்புடையீர்,

‘சிந்துபாத்’ திரைப்படம் ஜூன் 27 முதல் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இப்படத்தை வெளியிடுவதற்குத் தடையாகப் பல நியாயமற்ற கோரிக்கைகளையும் பல முறைகேடான வழிகளில் பிரச்சனைகளையும் நான் சந்திக்க நேர்ந்தது அனைவரும் அறிந்ததே.

ஆர்க்கா மீடியாவின் பணம் பரிக்கும் சூழ்ச்சிகளிலும் க்யூப் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களுக்கு எதிரான ஒருதலைபட்ச செயல்பாடுகளிலும் பல கயவர்களின் மறைமுக எதிர்ப்புகளிலும் சிக்கி செய்வதறியாது முன்பு அறிவித்த தேதியில் படத்தையும் வெளியிட முடியாமல் பல இன்னல்களுக்கும் மன உலைச்சல்களுக்கும் தள்ளப்பட்டேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இவ்வனைத்து விஷயங்களையும் அறிந்து உடனடியாக எந்த ஒரு தனிப்பட்ட சுயநலமும் லாபமும் இல்லாமல் எனக்காகவும் நியாயத்திற்காகவும் துணைநின்று இறுதிவரை போராடி அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து படத்தை வெளியிட பக்கபலமாக இருந்த மதிப்பிற்குரிய JSK films சதீஷ்குமார் அவர்களுக்கும் Amma creations T.சிவா அவர்களுக்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். இரவு பகல் பாராமல் உடனிருந்து போராடிய அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நான் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.உங்களின் முழு ஒத்துழைப்பும் ஒத்துமையாலும்தான் இன்று ‘சிந்துபாத்’ சாத்தியமாகி இருக்கிறது. இதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கென்று ஒரு பிரச்சனை என்றால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உறுதியாகவும் பக்கபலமாகவும் துணை நிற்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கிய JSK films சதீஷ்குமார் அவர்களுக்கும் Amma creations T.சிவா அவர்களுக்கும் துணைநின்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கையை பார்த்த பலருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. காரணம்  பட சிக்கலை தீர்க்க உதவிய விஜய் சேதுபதிக்கும் , யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் நன்றி சொல்லவில்லை. ஒருபக்கம் உள்ள அறிக்கையில் ஒரு வரியில் கூட விஜய் சேதுபதி மற்றும் யுவனின் பெயர் குறிப்பிடவில்லை. மாறாக மற்றவர்களுக்கு நன்றி சொல்லியிருக்கிறாரே? என்று பலரும் குழப்பத்தில் உள்ளனர்.