விஜய் சேதுபதி பெயர் கலைமாமணி விருது பட்டியலில் இருந்தும் மேடையில் அறிவிக்கப்படாததால் சர்ச்சை!! 

 

விஜய் சேதுபதி பெயர் கலைமாமணி விருது பட்டியலில் இருந்தும் மேடையில் அறிவிக்கப்படாததால் சர்ச்சை!! 

தமிழக அரசின் கலைமாமணி விருதுகளுக்கான பட்டியலில் நடிகர் விஜய்சேதுபதியின் பெயர் இடம்பெற்றிருந்த போதிலும் அவரது பெயர் மேடையில் அறிவிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் சேதுபதி பெயர் கலைமாமணி விருது பட்டியலில் இருந்தும் மேடையில் அறிவிக்கப்படாததால் சர்ச்சை!! 

2011-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருது பெறுவோரின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

 தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழுவில் பரிந்துரைப்படி, இயல், இசை, நாட்டியம், நாடகம், கிராமியம், திரைத்துறை மற்றும் சின்னத்திரை போன்ற  பல்வேறு கலைப்பிரிவுகளில் புகழ்பெற்ற, திறமைமிக்க கலை வித்தகர்களுக்கு மாநில அளவில் மிக உயரிய விருதான “கலைமாமணி” விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

கடைசியாக கடந்த 2010-ஆம் ஆண்டு மே மாதம் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு, கடந்த 6 ஆண்டுகளாக கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. 

இந்நிலையில், 2011-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது பெறுவோரின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் திரைப்பட நடிகர்கள் உள்ளிட்ட 201 பேர் இடம்பெற்றுள்ளனர்.

பட்டியலில், விஜய் சேதுபதி, கார்த்தி, சசிகுமார், ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, சூரி, சந்தானம், பிரபுதேவா உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் பெயர்களும், பி.ஆர்.வரலட்சுமி, பிரியாமணி, குட்டி பத்மினி, நளினி, சாரதா உள்ளிட்ட பல்வேறு நடிகைகளின் பெயர்களும், கானா உலகநாதன், கானா பாலா, உன்னி மேனன் உள்ளிட்ட பல்வேறு பின்னணிப் பாடகர்களின் பெயர்களும், சித்ரா லட்சுமணன், சுரேஷ் கிருஷ்ணா, ஹரி உள்ளிட்ட இயக்குனர்களின் பெயர்களும், யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஆண்டனி உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் பெயர்களும், ஏ.எம்.ரத்னம், கலைஞானம் உள்ளிட்ட தயாரிப்பாளர்களின் பெயர்களும், ஸ்டில்ஸ் ரவி, சேஷாத்ரி நாதன் சுகுமாரன் உள்ளிட்ட புகைப்படக் கலைஞர்களின் பெயர்கள் என  201 கலைவித்தகர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. 2017-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர்களில் ஒருவராக விஜய்சேதுபதி தேர்வு செய்யப்பட்டு கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் விழாவின் போது மேடையில் அவர் பெயர் அறிவிக்கப்பட வில்லை. அரங்கத்திற்கு தாமதாக வந்தது தான் அதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக விஜய் சேதுபதி விழாவிற்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.