விஜய் சேதுபதி படத்தில் ஆபாச காட்சியா?

 

விஜய் சேதுபதி படத்தில் ஆபாச காட்சியா?

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஆபாச கட்சியில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை: சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஆபாச கட்சியில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் சேதுபதி, தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து வருகிறார். அதுவும் அரவாணியாக நடிக்கிறார். இந்தக்கதையை இயக்குனர் பலருக்கும் சொல்லும் போது படத்தில் விஜய் குறிப்பிட்ட ஒரு காட்சியில் நடிக்க யாரும் சம்மதிக்க வில்லையாம். அந்தக்காட்சியில் விஜய் சேதுபதி ஒரு ஆணுடன் வாய் வழி உறவு கொண்டுவிட்டு வெளியில் வந்து பீடா போடுவதைப்போல் அமைக்கப்பட்டிருக்கிறதாம். இந்தக் காட்சியைக் கேட்டுவிட்டு பெரிய நடிகர்கள் பலரும் நடிக்க மறுத்து விட்டார்களாம். அதோடு அவரிடம் இந்தக் காட்சி இவ்வளவு ஆபாசமாக இருக்கிறதே இது தேவையா என்றும் கேட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால் அது  இப்போது படமாக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள். 

விஜய் சேதுபதிக்கு இன்று குழந்தைகள் முதல் பெண்கள் வரைக்கும் பல்வேறு தரப்பிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் பிடித்தமானவராக இருக்கும் விஜய் சேதுபதி படத்தில் இப்படியொரு காட்சியில் நடித்திருப்பதன் மூலம் அவரது ரசிகர்களின் ஆதரவை இழக்கும் ஆபத்தும் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் யார் அவருக்கு சொல்வது என்பதுதான் பெரிய கேள்வி.