விஜய் சேதுபதியை சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர்!

 

விஜய் சேதுபதியை சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர்!

நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து, அவருடன் செலவிட்ட நிமிடங்கள் குறித்து, தனது சமூக வலைத்தளத்தில் கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் பதிவிட்டுள்ளார்.

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து, அவருடன் செலவிட்ட நிமிடங்கள் குறித்து, தனது சமூக வலைத்தளத்தில் கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டராக கலக்கி வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் ஷங்கர். சென்னையைச் சேர்ந்த இவர், சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

vijay shankar

ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாட தேர்வாகியிருக்கும் விஜய் ஷங்கர், நடிகர் விஜய் சேதுபதியைச் சமீபத்தில் சந்தித்துள்ளார். அவருடன் எடுத்த புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு,’மக்கள் செல்வனை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி’ என்று பதிவிட்டுள்ளார். 

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் வரும் மார்ச்.29ம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.