விஜய் சேதுபதியுடன் தனி விமானத்தில் சென்ற நிகழ்ச்சி தொகுப்பாளினி! வைரலாகும் புகைப்படம்! 

 

விஜய் சேதுபதியுடன் தனி விமானத்தில் சென்ற நிகழ்ச்சி தொகுப்பாளினி! வைரலாகும் புகைப்படம்! 

நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சி தொகுப்பாளர் தியாவுடன் தனி விமானத்தில் சென்ற புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சி தொகுப்பாளர் தியாவுடன் தனி விமானத்தில் சென்ற புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

நடிகை விஜய் சேதுபதி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அது மட்டுமின்றி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் பிஸியான வேலையிலும் இவர் நேற்று மதுரையில் நடைபெற்ற ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடை திறப்பு விழாவுக்கு சென்று இருந்தார். அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்காக சன் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் தியா, நடிகர் விஜய் சேதுபதியுடன் தனி விமானத்தில் சென்றுள்ளார். 

அப்போது விஜய் சேதுபதியுடன் எடுத்த கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ‘மதுரை, கோவை என இரண்டு இடத்தில் தனியார் நகைக்கடை திறப்பு விழாவை நான் தான் ஹோஸ் பண்ணேன். அதற்காக சாட்டட் ஃபிளைட் ஏற்பாடு செய்திருந்தாங்க. அதில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பயணிக்கும் அளவுக்குக் குட்டி ஃபிளைட் தான். மதுரையில் நிகழ்ச்சி முடிந்ததும், இருவரும் இணைந்து கோவை வரை பயணித்தோம். கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கும் மேல் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நல்ல மனிதர் விஜய் சேதுபதி’ என்று கூறியுள்ளார்.  

இதையும் படிங்க: நான் ஒரு பச்ச மண்ணு…என்னியப்போய் இப்படி…கதறிய காஞ்சனா நடிகை!