விஜய் சேதுபதியுடன் இணையும் சிம்பு: எதற்காக தெரியுமா?

 

விஜய் சேதுபதியுடன் இணையும் சிம்பு: எதற்காக தெரியுமா?

‘தேர்ட் ஐ என்டர்டெயின்மெண்ட்’  தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 

புரியாத புதிர்,  இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவர் தற்போது   நடிகை பிந்து மாதவி நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். ‘தேர்ட் ஐ என்டர்டெயின்மெண்ட்’  தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

ttn

இந்நிலையில் இப்படம்   குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது சிம்பு, விஜய் சேதுபதி இணைந்து நாளை மாலை 5 மணிக்கு இப்படத்தின் டைட்டிலை அறிவிக்க இருக்கிறார்கள் என்று அறிவிப்பை  படக்குழு வெளியிட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள்  குறித்த தகவல்கள் அறிவிக்கப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.