விஜய் சேதுபதியின் மலையாள படத்தின் பரஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

 

விஜய் சேதுபதியின் மலையாள படத்தின் பரஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நடிகர் விஜய் சேதுபதி மலையாளத்தில் நடித்து வரும் புதிய படத்தின் பரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி மலையாளத்தில் நடித்து வரும் புதிய படத்தின் பரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் ஒரு வருடங்கள்கு குறைந்தது 5 முதல் 6 படங்களை வரை நடிக்கும் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். 

இவர் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து  சேரா நரசிம்ம ரெட்டி படத்தில் முக்கிய  கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி மற்றொரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் இவர் தற்போது மலையாள சினிமாவிலும் எண்ட்ரி கொடுத்துள்ளார். 

ஆம்.. மலையாளத்தில் இயக்குநர் சஜன் கலத்தில் இயக்கிவரும் படத்தில் நடித்து வருகிறார். ‘மார்கோனி மதாய்’ என்று பெயரிட்டுள்ள இப்படத்தில் ஜெயராமுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமுகவைத்தலங்களில் வைரலாக பரவி வருகிறது.