விஜய் சேதுபதியின் படத்தை தயாரிக்கும் ராணா டகுபதி! 

 

விஜய் சேதுபதியின் படத்தை தயாரிக்கும் ராணா டகுபதி! 

விஜய் சேதுபதி நடிக்கும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை ராணா டகுபதி தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி நடிக்கும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை ராணா டகுபதி தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் முதன்முறையாக 800 விக்கெட்களை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. எம்.எஸ். ஸ்ரீபதி இயக்கும் இப்படம் தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் வெளிவரவுள்ளது. தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும் இணைந்து தயாரிக்கவுள்ளார். தற்போது நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 800 படத்தின் படபிடிப்பு தொடங்கும் என்றும் 2020 ஆண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.