விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’ நாளையும் கூட ரிலீஸ் ஆகாது…ஏன் தெரியுமா?…

 

விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’ நாளையும் கூட ரிலீஸ் ஆகாது…ஏன் தெரியுமா?…

சிந்துபாத்’என்று தலைப்பு வைத்ததாலோ என்னவோ விஜய் சேதுபதியின் இந்த லேட்டஸ்ட் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.

‘சிந்துபாத்’ என்று தலைப்பு வைத்ததாலோ என்னவோ விஜய் சேதுபதியின் இந்த லேட்டஸ்ட் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இறுதியாக இப்படம் பல தடைகளைக் கடந்து நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் ரிலீஸ் தொடர்பான சிக்கல்கள் நிறைய மிச்சம் இருக்கின்றன என்கிறது விநியோகஸ்தர் வட்டாரம்.

அருண்குமார் இயக்கத்தில் ‘பண்ணையாரும் பத்மினியும்’,’சேதுபதி’ படங்களுக்கு மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம் சிந்துபாத். இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா முக்கிய வேடமொன்றில் நடித்துள்ளார்.   சுமார் இரு மாதங்களுக்கு முன்பே ரிலீஸாகவேண்டிய இப்படம் ஃபைனான்ஸ் பிரச்சினைகளால் தள்ளிக்கொண்டே போனது. பலமணி நேரப்பஞ்சாயத்துகளுக்குப் பிறகு  21ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டு தடபுடல் விளம்பரங்களும் செய்யப்பட்டு வந்த நிலையில் கடைசிநேர முட்டுக்கட்டைகளால் படம் திரைக்கு வரவில்லை.

sindubath

 பாகுபலி படத்தை தமிழகத்தில் வெளியிட்ட வகையில் சிந்துபாத் தயாரிப்பாளர் ராஜராஜன் சுமார் 18 கோடியை அந்த நிறுவனத்திற்கு தர வேண்டுமாம். அந்த பணத்தை கொடுக்காமல் இந்தப்படத்தை வெளியிடக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவோடு வந்து படத்தை நிறுத்திவிட்டார் பாகுபலி தயாரிப்பாளர்.அது போக, சிந்துபாத் படத்தை ராஜராஜனிடம் வாங்கி வெளியிடுவதாக இருந்த கிளாப் போர்டு சத்யா என்பவர் தியேட்டர் மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து சுமார் ஆறரை கோடி முன் பணம் வாங்கியிருக்கிறாராம். 

படம் தொடர்ந்து தள்ளிப்போவதைப் பார்த்துப் பதறிய விஜய் சேதுபதி இரு தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளரை வரவழைத்து தான் வாங்கிய சம்பளத்தில் பாதியை விட்டுக்கொடுத்து ரிலீஸுக்கு உதவியிருக்கிறார். அப்பணம் பாகுபலி தயாரிப்பாளர்களுக்கு செட்டில் பண்ணப்பட்டு இவ்வாரம் அதாவது நாளை படத்தை ரிலீஸ் செய்ய முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் பாதிப்பணம் பெற்றுக்கொண்ட பாகுபலி தயாரிப்பாளர்  திடீர் ட்விஸ்டாக முழுப்பணத்தையும் செட்டில் பண்ணாமல் படத்தை ரிலீஸ் பண்ண சம்மதிக்கமாட்டேன் என்று முரண்டு பிடிக்க ஆரம்பித்திருக்கிறாராம். படம் ரிலீஸாக வாய்ப்புள்ளதா என்பது இன்று நள்ளிரவுதான் தெரியுமாம்.