விஜய் கன்னத்தில் முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி: மாஸ்டர் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம்!

 

விஜய் கன்னத்தில் முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி: மாஸ்டர் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம்!

விளையாட்டாக எனக்கு ஒரு முத்தம் என்று கேட்க, விஜய் சேதுபதி விஜய்யை கட்டிப்பிடித்து இரண்டு கன்னத்திலும் முத்தம் கொடுத்துள்ளார்

பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர்  படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா, சென்னையில் நடைபெற்ற நிலையில், மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு அண்மையில் நெய்வேலியில் நடைபெற்றது. 

 


 

கோடைவிடுமுறைக்கு வெளியாகவுள்ளதாகக் கூறப்படும் இப்படத்தின்   குட்டி ஸ்டோரி பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை  பெற்றது.  

ttn

இந்நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பில் நடந்த  சுவாரஸ்ய நிகழ்வு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதில், அண்மையில் ஆர்ட் டைரக்டர் சதீஷ்குமாரின் பிறந்த நாளை படக்குழு விஜய் மற்றும் விஜய் சேதுபதி முன்னிலையில்  கொண்டாடியுள்ளது. அப்போது சதீஷ்குமாரை விஜய் சேதுபதி தனது பாணியில் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். அப்போது அதை பார்த்துக்கொண்டிருந்த விஜய், விளையாட்டாக எனக்கு ஒரு முத்தம் என்று கேட்க, விஜய் சேதுபதி விஜய்யை கட்டிப்பிடித்து இரண்டு கன்னத்திலும் முத்தம் கொடுத்துள்ளார். இதை கண்டு வியந்த படக்குழு கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.

இருப்பினும் இதற்கான புகைப்படம், வீடியோ என எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால்  விரைவில் இதை நாம் எதிர்பார்க்கலாம். எது எப்படியோ விஜய் சேதுபதி விஜய்க்கு முத்தமிடும் புகைப்படமோ வீடியோவோ  வெளியாகும் பட்சத்தில்  நெய்வேலி ரசிகர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட செல்பி போல அதுவும்  நிச்சயம் வைரலாகும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.