விஜய் கடந்து வந்த பாதை… ஒவ்வொன்னும் தெறி ஹிட்!

 

விஜய் கடந்து வந்த பாதை… ஒவ்வொன்னும் தெறி ஹிட்!

தமிழ் சினிமா எத்தனையோ நட்சத்திரங்களைப் பார்த்திருக்கிறது. ஆனால், தமிழ் திரையுலகில் துருவ நட்சத்திரமாக பல போராட்டங்களைக் கடந்து வந்து இன்றும் ரசிகர்களின் மனதில் தளபதியாய் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் 

தமிழ் சினிமா எத்தனையோ நட்சத்திரங்களைப் பார்த்திருக்கிறது. ஆனால், தமிழ் திரையுலகில் துருவ நட்சத்திரமாக பல போராட்டங்களைக் கடந்து வந்து இன்றும் ரசிகர்களின் மனதில் தளபதியாய் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் 

vijay

விஜய். விஜய் கடந்து வந்த பாதையை ரீவைண்ட் பண்ணிப் பார்த்தால், இன்றைய இளைஞர்களுக்கு அத்தனையும் தன்னம்பிக்கைத் தருகிற டானிக். அவரின் ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் அசுரத்தனமான உழைப்பும், தொழில் மீது ஆத்மார்த்தமான பக்தியும் இருப்பது தெரியும். 

vijay

இலயோலா கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து, சினிமாவில் சாதிக்க வேண்டுமென்கிற ஆவேசத்துடன் விஜய் அறிமுகமான படம் ‘நாளைய தீர்ப்பு’. தன் மகனை வேறொரு தயாரிப்பாளரின் படத்தில் அறிமுகப்படுத்தாமல், சொந்தப் பணத்தில், இயக்கத்தில் அறிமுகம் செய்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். 

vijay

விஜய்க்கு அறிமுகப்படமான  ‘நாளைய தீர்ப்பு’  வெற்றிப் படமாக அமையவில்லை. ஆனால், ஆக்‌ஷன் ஹீரோ ஒருவர் உருவாகுகிறார் என்கிற விசிட்டிங் கார்ட்டை கோலிவுட் முழுக்க கொண்டு சேர்த்த படமாக அமைந்தது. 
‘நாளைய தீர்ப்பு’ க்கு பின்  ‘செந்தூரப் பாண்டி’  ரிலீசான போது, விஜய் நடிப்பைக் கிண்டல் செய்யாதவர்களே இல்லை என்கிற அளவிற்கு விமர்சனங்கள் எழுந்தது.

vijay

எஸ்.ஏ.சி. சம்பாதித்த பணத்தையெல்லாம் மகனை வைத்து படமெடுத்து அழிக்கிறார்’ என்று காதுபடவே எல்லோரும் பேசினார்கள். வேறொரு நடிகராக இருந்திருந்தால், அன்றைக்கே சினிமாவிற்கு முழுக்கு போட்டிருப்பார். வேறொரு தந்தையாக இருந்திருந்தால், அதோடு மகனை இயக்குநராகவே, தயாரிப்பாளராகவோ உருவாக்கி அழகு பார்த்திருப்பார். ஆனால், விஜய்யிடம் எப்போதுமே நினைத்ததை அடையும் வரைக்கும் போராடுகிற குணம் இருந்தது. சின்ன வயதிலேயே தன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இருந்து அந்த குணத்தை வளர்த்துக் கொண்டார் விஜய். அது போராடுகிற குணம்.

vijay

மீண்டும், மகனுக்கு வெற்றிப் படம் கொடுத்தே தீர வேண்டிய கட்டாயத்தில் ‘ரசிகன்’ படத்தைத் தொடங்கினார் எஸ்.ஏ.சி. ‘ரசிகன்’  சுமாரன வெற்றியைப் பெற்ற போதிலும், விமர்சனங்கள் விஜய்க்கு எதிராகவே இருந்தன. எதிர் விமர்சனங்களுக்கு விஜய் காது கொடுக்கவே இல்லை. வெற்றி கிடைக்கும் வரையில் போராடுகிற யுக்தியையும், அவருடைய தேடலையும் தொடர்ந்துக் கொண்டேயிருந்தார். 

vijay

‘நாளைய தீர்ப்பு’ படத்தில் தொடங்கி, ‘ரசிகன்’, ‘தேவா’, ‘விஷ்ணு’, ‘மாண்புமிகு மாண்வன்’ வரை விஜய்க்கு பெரிய ஹிட் படம் அமையவே இல்லை. வேறு எந்த நடிகராக இருந்திருந்தாலும் அடுத்தப் படத்தில் நடிக்க யோசித்திருப்பார்கள். அப்பொழுது எஸ்.ஏ.சந்திரசேகர் யோசித்து எடுத்த முடிவு தான் விஜய் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பமாக அமைந்தது.

vijay

‘மாண்புமிகு மாணவன்’ படம் வரையில் வெளியான விஜய்யின் எல்லா படங்களிலும், விஜய் விளையாட்டுப் பிள்ளையாகவே வலம் வருகிற மாதிரியான கேரெக்டர்களே அமைந்திருந்தன.ஜாலியாக ஊர் சுற்றியோ, அநியாயத்தை எதிர்த்து ஆவேசமாய் குரல் கொடுக்கும் இளைஞனாகவோ, சட்ட நுணுக்கங்களைப் பேசும் வழக்கமான எஸ்.ஏ.சி. படத்தின் கதாநாயகனைப் பிரதிபலிப்பதாகவே அமைந்தது. 

vijay

இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் ‘பூவே உனக்காக’ படத்தின் கதை களமே வேறு விதமான விஜய்யை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. 
பெண்கள் மத்தியிலும், காதலர்கள் மத்தியிலும் ஏன்…
வயதானவர்களிடையேயும் விஜய்யை கொண்டுச் சேர்த்த படம் ‘பூவே உனக்காக’. ‘பூவே உனக்காக’ படத்தில் விஜய் ஏற்றிருந்த கதாபாத்திரம், கதைப்படியும் காதலர்கள், வயதானவர்கள், பெண்கள் என்று சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களிடையேவும் ‘நல்ல பையன். இப்படி ஒரு மகன் நமக்கில்லையே’ என்று எல்லோரையும் ஏங்க வைக்கும் விதமாகவே அமைந்தது.

vijay

ரசிகர்கள் கொடுத்த பெரிய வரவேற்பினால் விஜய்க்கு முதல் வெள்ளி விழா படமாகவும் ‘பூவே உனக்காக’ அமைந்தது. உரக்கப் பேசுகிற வசனங்கள், ஆர்ப்பாட்டமான நடிப்பு எல்லாம் இல்லாமல் இருந்த விஜய்யை எல்லோருமே கொண்டாட ஆரம்பித்த படமாகவும் ‘பூவே உனக்காக’ இருந்தது.

vijay

இதையடுத்து வெளிவந்த ’லவ் டுடே’ படமும் விஜய்க்குள் ஹிட் படமாக அமைந்தது. அதன் பிறகு விஜய் தொட்டதெல்லாம் ஹிட் என்கிற நிலைக்கு வந்தது. ஒவ்வொரு பட ரிலீஸுக்குப் பிறகும் ரசிகர்கள் அதிகரிக்கத் தொடங்கினார்கள். விதவிதமான கதாபாத்திரங்களில் ஜொலிக்கத் தொடங்கிவிட்டார் விஜய். வசந்த் இயக்கத்தில் ’நேருக்கு நேர்’ நடிகர் திலகத்தோடு ’ஒன்ஸ்மோர்’ என்று விஜய்யின் வளர்ச்சி சரியான பாதையில் பயணிக்க தொடங்கியது. 

vijay

ஒரு படத்தின் நாயகன், எப்பொழுதுமே நல்லவனாகவே இருப்பான் என்கிற பிம்பத்தை அடித்து நொறுக்கிய  ‘ப்ரியமுடன்’, ’நிலாவே வா’  படங்களும் பரபரப்பாக பேசப்பட்ட சமயத்தில், இயக்குநர் பாசிலின் ’காதலுக்கு மரியாதை’ விஜய் என்கிற நடிகரை இன்னொரு லெவலுக்கு அழைத்துச் சென்றது. தமிழகம் தாண்டியும் விஜய்யை கொண்டாட ஆரம்பித்தார்கள். 

vijay

‘காதலுக்கு மரியாதை’ படம் பெற்ற வரவேற்பை சிந்தாமல், சிதறாமல் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம்,  விஜய்க்கு பெண் ரசிகைகளை அதிகரிக்க வைத்தது. குடும்பத்தில் எல்லோருமே விஜய்யைக் கொண்டாட துவங்கினார்கள். ‘குஷி’, ‘ப்ரியமானவளே’, ‘ஃப்ரெண்ட்ஸ்’, ‘பகவதி’ போன்ற படங்களின் வெற்றி விஜய்யை  சூப்பர் ஹிட் நாயகனாகவே வடிவமைத்தது. 

vijay

விஜய் ஆசைப்பட்டது அதிரடி நாயகனாக நடிப்பதைத் தான். ஆனால், தனது ஆரம்ப படங்களில் அதிரடி நாயகனாக தன்னை நிரூபித்து வெற்றி பெறாததால், அந்த ஏக்கத்துடனே இருந்த விஜய் தனது மென்மையான காதல் படங்கள் ஹிட் அடித்துக் கொண்டிருந்த நேரத்தில், தான் ஆசைபட்ட ஆரம்ப காலத்தில் செய்ததைப் போன்ற ஆக்‌ஷன் ஹீரோவாக தன்னை மாற்றும் முயற்சியில் இறங்க நினைத்து ரிஸ்க் எடுத்தார். 

vijay

அப்படி ரிஸ்க் எடுக்காமல் இருந்திருந்தால் நடிகர் மோகன், ராமராஜன் போன்ற வழக்கமான நடிகராகவே விஜய் இருந்திருப்பார். அப்போது அவர் எடுத்த துணிச்சலான முடிவு தான் இன்று வரையில் அவரை ரசிகர்கள், தங்களின் தளபதியாக கொண்டாட வைத்திருக்கிறது. ஆம், ஆக்‌ஷன் படமான  ‘திருமலை’  விஜய்யின் மென்மையான நாயகன் பிம்பத்தை உடைத்து, அதிரடி நாயகனாக மாற்றியது.

ghilli

அந்த படத்துக்கு பிறகு, விஜய் பேரைச் சொன்னாலே நல்ல விலைக்கு படம் வியாபாரம் ஆகும் நிலை உருவானது. வினியோகஸ்தர்களின் விருப்ப நாயகனாக உருவானார் விஜய். ‘கில்லி’ படத்திற்குப் பிறகு விஜய் படங்கள், தமிழ் சினிமா வியாபாரத்தில் உச்சத்தைத் தொட்டன. 

‘ரசிகன்’ படத்தில் அறிமுகமான சமயங்களில், கமர்ஷியல் படங்களில் நடிக்க ஆசைப்பட்ட விஜய், அதன்பிறகு என்ன மாதிரியான கதையுடன் நடித்தாலும், அந்தப் படங்கள் கமர்ஷியல் படங்களாக மாறியது. ‘காவலன்’, ‘நண்பன்’ எல்லாம் ஆர்பாட்டமில்லாத விஜய் நடிப்பை வெளிப்படுத்தியது.

vijay

இப்போது வரையிலும் விஜய் என்றால் தெறி ஹிட் என்று அந்த வெற்றிப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதன் பிறகு தங்கள் தலைவராகவே விஜய்யைக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள். தளபதி விஜய்க்கு டாப் தமிழ் நியூஸ் வாசகர்களின் சார்ப்பில் பிறந்தநாள் வாழ்த்துகள்!