விஜய் எப்போதும் ஸ்பெஷல்; அஜித் ரொம்ப பிடிக்கும்: தல-தளபதி குறித்து ‘96’ ஜானு என்ன சொல்றாங்க பாருங்க!

 

விஜய் எப்போதும் ஸ்பெஷல்; அஜித் ரொம்ப பிடிக்கும்: தல-தளபதி குறித்து ‘96’ ஜானு என்ன சொல்றாங்க பாருங்க!

‘96’ திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்த நடிகை த்ரிஷா, தல அஜித், தளபதி விஜய்யுடன் நடித்த தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

சென்னை: ‘96’ திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்த நடிகை த்ரிஷா, தல அஜித், தளபதி விஜய்யுடன் நடித்த தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘96’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. ’விண்ணைத்தாண்டி வருவாயா’ ஜெஸ்ஸியை மறக்கடிக்கும் அளவிற்கு ‘96’ படத்தின் ஜானுவாக த்ரிஷா மக்கள் மனதில் நின்றுவிட்டார்.

trisha

சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை த்ரிஷா, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான தல-தளபதியுடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டார். அப்போது அவர் கூறுகையில், தளபதி விஜய்யுடன் 4 படங்கள் நடித்திருக்கிறேன். எப்போதுமே அவர் எனக்கு ஸ்பெஷல். எல்லா சூழ்நிலையையும் பொறுமையாக கையாளும் விதம் எனக்கு பிடிக்கும். சமீபத்தில் ‘சர்கார்’ இச வெளியீட்டு விழாவில் அவர் பேசிய வீடியோவை பார்த்து அவரது என்றென்றும் இளமை தோற்றத்தில் இம்ப்ரஸ் ஆகிவிட்டேன்.

தல அஜித்தை எனக்கு ஒரு நடிகராகவும், மனிதராகவும் அவரை ரொம்ப பிடிக்கும். உண்மையாக இருப்பார். எதற்காகவும், யாரிடமும் நடிக்கமாட்டார். எப்போதுமே அவர் அவராக தான் இருப்பார் என்றார்.

trisha

மேலும், தமிழ் சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வரும் நயன்தாரா, ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், சமந்தா குறித்தும் பாராட்டியுள்ளார். சிங்கிள் ஹீரோயினாக நயன்தாரா கலக்கிக் கொண்டிருக்கிறார். ஜோதிகா-சிம்ரன் ஆகியோர் ரீ எண்ட்ரியில் அசத்தி வருகின்றனர். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ காலம் முதலே சமந்தாவின் நடிப்பு ரொம்ப பிடிக்கும். கீர்த்தி சுரேஷ் மிகச்சிறந்த நடிகை என அனைவரையும் பாராட்டியுள்ளார்.

இதுபோன்று ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் த்ரிஷா பெரிதாக வெற்றிபெறவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த த்ரிஷா, இப்போது தான் தமிழில் ஹீரோயினுக்கான படங்கள் அதிகம் வருகிறது. கண்டிப்பாக ‘96’ படத்துக்கு பின் அதிக வாய்ப்பு வரும் என நினைக்கிறேன். நடிகைகள் கொஞ்ச காலம் தான் திரையுலகில் ஜொலிக்க முடியும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை’ என த்ரிஷா தெரிவித்துள்ளார்.