“விஜய் என்ன சாப்பிடுகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்” மனம் திறந்த ஹ்ரித்திக் ரோஷன்

 

“விஜய் என்ன சாப்பிடுகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்” மனம் திறந்த ஹ்ரித்திக் ரோஷன்

பாலிவுட்டில் மிகச்சிறந்த நடிகர் மற்றும் சிறப்பான நடனத்திறமையும் கொண்டவர்  ஹிருத்திக் ரோஷன். இவரது நடனத்தை பார்த்து வியந்து போகாதவர்களே இருக்கமுடியாதது. அந்தளவிற்கு கஷ்டமான ஸ்டெப்களை அசால்ட்டாக போடுவார். பாலிவுட்டில் மிகச் சிறப்பாக நடனமாடக்கூடிய நடிகர்கள் அதிகம் பேர் உள்ளனர். தெற்கிலும் அவர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் விஜய், அல்லு அர்ஜுன் போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

பாலிவுட்டில் மிகச்சிறந்த நடிகர் மற்றும் சிறப்பான நடனத்திறமையும் கொண்டவர்  ஹிருத்திக் ரோஷன். இவரது நடனத்தை பார்த்து வியந்து போகாதவர்களே இருக்கமுடியாதது. அந்தளவிற்கு கஷ்டமான ஸ்டெப்களை அசால்ட்டாக போடுவார். பாலிவுட்டில் மிகச் சிறப்பாக நடனமாடக்கூடிய நடிகர்கள் அதிகம் பேர் உள்ளனர். தெற்கிலும் அவர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் விஜய், அல்லு அர்ஜுன் போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

vijay-dancing

சமீபத்தில்சென்னைக்கு விசிட் அடித்த ஹிருத்திக், தெற்கு சினிமா பிரபலங்களான அல்லு அர்ஜுன் மற்றும் தளபதி விஜய் பற்றிப் பேசியிருந்தார். குறிப்பாக அவர்களின் எனர்ஜி பற்றி பேசுகையில், “சில அற்புதமான டான்ஸ் ஸ்டெப்களை அவர்கள் அவ்வளவு எளிதாக போடுகிறார்கள்” என்று பாராட்டியிருந்தார், 

allu arjun

விஜயைப் பற்றி பேசும்போது, ஹிருத்திக் பிரமிப்பை வெளிப்படுத்தியதோடு, “அவருக்கு ஏதேனும் ரகசிய உணவு அல்லது டயட் இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர்கள் நடனமாடுவதற்கு முன்பு என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்றார்.

இது மட்டுமல்ல, அல்லு அர்ஜுனால் தான் ஈர்க்கப்பட்டதைப் பற்றி பேசிய நடிகர், “ஓ கடவுளே, அவர் மிகவும் ஆற்றல் மிக்கவர், வலிமையானவர், ஊக்கமளிப்பவர்” என்று குறிப்பிட்டார். பாலிவுட்டின் நடனப்புயல் தென்னிந்திய நடனப்புயல்களை பாராட்டிப் பேசியது மூவரின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.