விஜய் உடன் செல்ஃபி, நெட்ஃபிளிக்ஸ் சந்தா, ஆபாச சாட்… குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு பெற பா.ஜ.க செய்யும் தில்லுமுல்லு!

 

விஜய் உடன் செல்ஃபி, நெட்ஃபிளிக்ஸ் சந்தா, ஆபாச சாட்… குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு பெற பா.ஜ.க செய்யும் தில்லுமுல்லு!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. ஆனால், மக்கள் அதற்கு ஆதரவாக உள்ளது போன்ற தோற்றத்தைப் பாரதிய ஜனதா கட்சியினர் உருவாக்கி வருகின்றனர். இந்த சட்டத்துக்கு மக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க 88662 88662 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுக்க வேண்டும் என்று பா.ஜ.க தலைமை கேட்டுக்கொண்டது. ஆனால், இதற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளது என்பதை காண்பிக்க பாரதிய ஜனதா கட்சியினர் செய்துவரும் அசிங்கங்கள் சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. ஆனால், மக்கள் அதற்கு ஆதரவாக உள்ளது போன்ற தோற்றத்தைப் பாரதிய ஜனதா கட்சியினர் உருவாக்கி வருகின்றனர். இந்த சட்டத்துக்கு மக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க 88662 88662 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுக்க வேண்டும் என்று பா.ஜ.க தலைமை கேட்டுக்கொண்டது. ஆனால், இதற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் மக்களின் ஆதரவைப் பெற்றதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தி பா.ஜ.க நிர்வாகிகள் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு கீழ் இறங்கி செயல்பட்டு வருகின்றனர்.

BJP supporters

நடிகை காயத்ரி ரகுராம் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் இந்த நம்பரைக் கொடுத்து விடுதலைச் சிறுத்தை கட்சியினர் என்னிடம் பேச வேண்டும் என்றால் இந்த எண்ணைத் தொடர்புகொள்ளுங்கள் என்றார்.

பெண்கள் பெயரில் செயல்பட்டுவந்த பல ஆபாச சோஷியல் மீடியா பக்கங்களில் என்னிடம் பேச வேண்டும் என்றால் இந்த நம்பரை தொடர்புகொள்ளுங்கள் என்று பதிவு வெளியானது.
அனைத்துக்கும் மேலாக, இந்த எண்ணைத் தொடர்புகொண்டால் நெட்ஃபிளெஸ் என்ற ஆன்லைன் சேனலுக்கான ஆறு மாச சந்தா இலவசமாக கிடைக்கும் என்று வதந்தி பரப்பப்பட்டது. இதற்கு நெட்ஃபிளெஸ் மறுப்பு தெரிவித்தது.

 

தமிழகத்தில் விஜய். அஜித்துக்கு ரசிகர்கள் அதிகம். அஜித் சோஷியல் மீடியா பக்கத்தில் இல்லை. இதனால், விஜய்யை மையமாக வைத்துப் பதிவுகள் வெளியாகி வருகின்றன. மேலே குறிப்பிட்ட நம்பரை வெளியிட்டு, நடிகர் விஜயை நேரில் சந்திக்க விருப்பமா? இந்த நம்பரை தொடர்புகொள்ளுங்கள் உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் வீடு தேடி வரும்” என்று பதிவிட்டு பலர் பரப்பி வருகின்றனர்.
பா.ஜ.க-வினர் பரப்பும் போலி தகவல் பற்றி நாடு முழுக்க செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனாலும், இதைப் பற்றி பா.ஜ.க-வினர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. எப்படியும் அதிக ஆதரவை பெற வேண்டும் என்று எல்லா வழிகளிலும் முயற்சி செய்த வருகின்றனர். இவ்வளவு கோல்மால் செய்தும் போதிய ஆதரவைப் பெற முடியாமல் பா.ஜ.க-வினர் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.