விஜய் ஆண்டனியுடன் இணைந்த காவ்யா தாப்பர்! 

 

விஜய் ஆண்டனியுடன் இணைந்த காவ்யா தாப்பர்! 

விஜய் ஆண்டனி நடித்து வரும் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: விஜய் ஆண்டனி நடித்து வரும் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் நடிப்பில் தற்போது ‘அக்னி சிறகுகள்’, ‘தமிழரசன்’ மற்றும் ‘காக்கி’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து தற்போது மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கவுள்ள படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

இந்த நிலையில் இன்னும் பெயரிடாத இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை காவ்யா தாப்பர் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் கூறுகையில், ‘கதாநாயகிக்காக பல்வேறு ஆடிஷன்களை நடத்தினோம். காவ்யாவை சந்தித்த பின் தான் மற்றொரு படத்தில் அவர் நாயகியாக நடிப்பது தெரிய வந்தது. கேமரா முன் நடித்துள்ள அனுபவம் இருப்பதால் சாதகமாக அமைந்தது. தற்போது தனது கதாபாத்திரத்திற்காக காவ்யா தயாராகி வருகிறார்’ என்று கூறியுள்ளார். 

மேலும் பிக் பாஸ் ஆரவ் கதாநாயகனாக நடிக்கும் மார்கெட்ராஜா எம்பிபிஎஸ் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.