விஜய் அண்ணா வேற லெவல் : சர்கார் இசை வெளியீட்டு விழாவில் கைத்தட்டல் வாங்கிய பிரபலம்!

 

விஜய் அண்ணா வேற லெவல் : சர்கார் இசை வெளியீட்டு விழாவில் கைத்தட்டல் வாங்கிய பிரபலம்!

விஜய் அண்ணா வேற லெவல் என்று நடிகர் யோகி பாபு சர்கார் இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.

சென்னை: விஜய் அண்ணா வேற லெவல் என்று நடிகர் யோகி பாபு சர்கார் இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.

சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தயாராகியுள்ளது சர்கார் திரைப்படம். நடிகர் விஜய் நடித்துள்ள  இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

yogibabu

 

இந்நிலையில் விழாவில் பேசிய நடிகர்யோகி பாபு, ‘சர்கார் போன்ற பெரிய படத்தில் வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம். படப்பிடிப்பு முடித்துவிட்டு வந்திருக்கிறேன். விஜய் அண்ணாவுடன் நடித்ததில் மகிழ்ச்சி.  மெர்சல் படத்தில் நடித்த போது கொஞ்சம் தயங்கினேன். விஜய் அண்ணன் தான் தொழில் என்று வந்துவிட்டால் சரியாகச் செய்ய வேண்டும் தயங்கக்கூடாது என்று அட்வைஸ் கொடுத்தார். பல நடிகர்களுடன் நடித்துவிட்டேன். அஜித்துடனும் நடிக்கிறேன், ஆனால் விஜய் அண்ணா வேற லெவல் என்று தெரிவித்தார்.