விஜய்யை திட்டிய சீமான்: #திருட்டுபயசீமான் ஹேஷ்டாக்கை டிரெண்டாகும் விஜய் ரசிகர்கள்!

 

விஜய்யை திட்டிய சீமான்:  #திருட்டுபயசீமான்  ஹேஷ்டாக்கை டிரெண்டாகும் விஜய் ரசிகர்கள்!

நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்து  சீமான் பேசியது  விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்து  சீமான் பேசியது  விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வடபழனியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற சீமான் ரஜினி, கமல் குறித்து விமர்சித்துப் பேசினார். அதன் பிறகு நடிகர் விஜய் குறித்து பேசிய அவர்,  ‘சர்கார் விவகாரத்தின் போது விஜய் முதல்வரிடம் தாழ்ந்து சென்றது சரியானது அல்ல. சர்கார் படத்தில் அரசியல் வசனங்கள் பேசினால், ஆமாம் நான் பேசினேன் எனத் தைரியமாக சொல்லவேண்டும். அதை விட்டுவிட்டு முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்பது, ஜெயலலிதா மீது மரியாதை வைத்திருந்தேன் எனக் கூறுவது எல்லாம் அவமானம். 
 

vijay

எடப்பாடிக்கு எல்லாமா பயப்படுவது, அவரே மோடியின் அடிமை. பதவி போனதும் அவரைப் பக்கத்து வீட்டுக்காரன் கூட மதிக்கமாட்டான். உன் மேல் நிறைய மரியாதை வைத்திருந்தேன்.. நீயெல்லாம் என் தம்பியா? இதில் ஒரு விரல் புரட்சியாம், என் படத்தில் நடிக்கமாட்டாராம். ஆனால் நான் பேசும் வசனங்களை எல்லாம் தன் படத்தில் பேசுவாராம்’ என விஜய்யை விமர்சித்திருந்தார். 

seeman

 

இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் #திருட்டுபயசீமான் என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.