விஜய்யின் மாஸ்டர் படம் கொரிய படத்தின் தழுவலா? இணையத்தில் பரபரப்பு

விஜய்யின் மாஸ்டர் படம் கொரிய படத்தின் தழுவலா? இணையத்தில் பரபரப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கும் மாஸ்டர் என பெயரிடப்பட்ட படத்தின்  படிப்பிடிப்புகள் டெல்லி மற்றும் சென்னையில் நடைபெறுகிறது.  பூந்தமல்லி அருகே மாற்றுத்திறனாளிகள் பள்ளியிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

விஜய் நடித்த சர்க்கார் படத்தின் கதை வேறு ஒருவருடையது என சர்ச்சையான நிலையில் அடுத்து  அவர் நடிக்கும் மாஸ்டர் திரைப்படமும் கொரிய படத்தின் தழுவல் என்ற சர்ச்சை உருவாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கும் மாஸ்டர் என பெயரிடப்பட்ட படத்தின்  படிப்பிடிப்புகள் டெல்லி மற்றும் சென்னையில் நடைபெறுகிறது.  பூந்தமல்லி அருகே மாற்றுத்திறனாளிகள் பள்ளியிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

thalapathy-64

தற்போது கர்நாடகாவில் உள்ள சிறைச்சாலையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் விஜய்யின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தோற்றம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. 

இந்நிலையில் மாஸ்டர் படம் ‘சைலன்ஸ்டு’என்ற கொரிய படத்தின் சாயலில் இருப்பதாக இணையதளங்களில் செய்திகள் தீயாய் பரவி வருகிறது. மாஸ்டர் மற்றும் சைலன்ஸ்டு போஸ்டர்களை இணைத்தும் வைரலாக்கப்படுகிறது. கொரிய மொழியில் உருவாக்கப்பட்ட சைலன்ஸ்டு படத்தில் பாலியல் துன்புறுத்தலில் சிக்கி உள்ள வில்லன் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் வேலையில் சேருகிறார். அவரை பார்த்ததும் மாணவ-மாணவிகள் பயந்து ஓடுகிறார்கள். குற்றவாளிகளுக்கு எதிராக நாயகன் களம் இறங்கி அவர்களை தண்டிப்பதுபோல் காட்சிகள் உள்ளன. இந்த படம் கொரியாவில் வெற்றிகரமாக ஓடியது.

இதனால்தான் விஜய் படப்பிடிப்பு மாற்றுத்திறனாளிகள் பள்ளியிலும் சிறையிலும் நடத்தப்படுகிறது என்றும் தகவல் பரவி வருகிறது. ஆனால் இந்த செய்தியை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.