விஜய்சேதுபதி படத்தின் சேட்லைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

 

விஜய்சேதுபதி படத்தின் சேட்லைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள  ‘சீதக்காதி’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள  ‘சீதக்காதி’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதியின் 25 வது படம் சீதக்காதி. இந்த படத்தை  ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 80 வயதுடைய அய்யா ஆதிமூலம் என்ற முதியவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மூத்த நடிகை அர்ச்சனா நடித்துள்ளார். இவர்களுடன் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், மகேந்திரன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

vijay tv

சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. டிசம்பர் 20-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சீதக்காதி’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை,  விஜய் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளது. இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள்  உற்சாகத்தில் உள்ளனர்.