விஜய்சேதுபதியுடன் நீங்களும் டிக் டோக் செய்யலாம்? எப்படி தெரியுமா?

 

விஜய்சேதுபதியுடன் நீங்களும் டிக் டோக் செய்யலாம்? எப்படி தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள்  பலர் அவருடன் டிக் டோக் செய்து வருகின்றனர்.

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள்  பலர் அவருடன் டிக் டோக் செய்து வருகின்றனர்.

தனது நடிப்புத் திறமையால் மட்டுமே தனக்கென தனி இடம் பிடித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி  இன்று 41-வது தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பீட்சா, நடுவுல கொஞம் பக்கத்த காணோம் என ஆரம்பித்த விஜய் சேதுபதியின் திரை பயணம்  இன்று அவரை சூப்பர் ஸ்டாருடன் இணைந்து பேட்ட வரை வந்துள்ளது.

 

யதார்த்தமான பேச்சு, எளிமை, தனக்கே உரிய பாணியில் இயல்பாக  எல்லாவற்றையும் கடந்து செல்வது என ரசிகர்கள் மத்தியில் மக்கள் செல்வனாக  சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள ஷில்பா கதாபாத்திரத்துடன் டிக் டோக் செய்யும் வாய்ப்பை அப்படத்தின் நிறுவனம் Tyler Durden And Kino Fist வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர்கள் பலர் ஷில்பாவுடன் டிக் டோக்  மூலம் நடனமாடி வருகின்றனர்.