விஜய்க்கு 45ஆவது பிறந்த நாள் வாழ்த்தும், நல்லதா நாலு வார்த்தையும்!

விஜய்க்கு 45ஆவது பிறந்த நாள் வாழ்த்தும், நல்லதா நாலு வார்த்தையும்!

சினிமா முடிந்து அரசியல் உள்ளே செல்லும்போது, என்ன மாதிரியான கருத்துக்களைக்கொண்ட படங்களை நாம் நம் ரசிகர்களுக்கு தந்திருக்கிறோம் என்ற சுயபரிசோதனை உங்களை தலைத்தாழ்த்த விடாமல் பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பு. சினிமாமூலம் நல்லதை கற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, கெட்டதை கற்றுக்கொள்வது ரொம்ப எளிது. உங்கள் ரசிகர்களின் சிந்தனையை உயர்த்த வேண்டிய கடமையும் உங்களுக்கு இருக்கிறதல்லவா?

திரைத்துறையில் தந்தையின் பின்புலம் இருந்தாலும், முட்டிமோதி இன்றைக்கு முதல்தர ஆட்டக்காரர்களில் ஒருவராக இருக்கும் விஜய்க்கு அவருடைய 45ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்வோம். சினிமாவில் உச்சம் கண்டவுடன் அடுத்து என்ன? அரசியல்தானே? அரசியலில் கால்பதிக்கும் எண்ணம் விஜய்க்கு இருப்பது ஒன்றும் ரகசியமல்ல.

Vijay Rahul

ராகுல் காந்தியை பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே சந்தித்தார், பின்னர் மோடியுடன் சந்திப்பு, அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டார், சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிகட்டு போராட்டம், என கிடைத்த கேப்பில் எல்லாம் தேங்காய் உடைத்துப் பார்த்தார். ஆனாலும், தனது நேரம் இன்னும் நெருங்கவில்லை என்ற உண்மையை உணர்ந்துகொண்ட புத்திசாலித்தனத்தையும் பாராட்டியாக வேண்டும்.

Vijay Asin

விஜய், கதைத்தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தவேண்டும். கடந்த நாலைந்து வருடங்களாக பரவாயில்லை. ராணுவம், போலீஸ், கல்லூரி காவலர் என கொஞ்சம் சமுதாய (!) நோக்கோடு படங்களை கொடுத்துக்கொண்டிருக்கிறார். இதே ஒரு 10 – 15 வருடங்களுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால்  சிவகாசி, போக்கிரி, அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என குறிப்பிட்டுச் சொல்லும்படி சில படங்கள் உள்ளன. அந்தப்படங்களின் வணிக வெற்றி தோல்வி குறித்து நமக்கு கவலையில்லை. ஆனால் உள்ளடக்கம்?

Vijay

மேற்கண்ட இந்தப்படங்களில் பெண்கள் எப்படி உடை அணியவேண்டும், எப்படிப் பேசவேண்டும், எப்படி நடக்கவேண்டும் என்ற 80களின் ரஜினி பயன்படுத்திய அதே டெம்ப்ளேட். விஜய் உடனடியாக இத்தகைய பிற்போக்குத்தனமான கருத்துக்களைக் கொண்ட படங்களுக்கு நோ சொல்ல வேண்டும்! ரஜினி (அவருக்கும் முன்பே சூப்பர் சீனியர் எம்.ஜி.ஆர். இருக்கிறார்), விஜய் என நீண்ட அந்த பாரம்பரியம் இப்போது சிவகார்த்திகேயனில் வந்து நிற்கிறது.