விஜய்க்கு துளிர்விட்டு போகல அமைச்சர்களுக்கு தான் துளிர்விட்டு போச்சு: பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!

 

விஜய்க்கு துளிர்விட்டு போகல அமைச்சர்களுக்கு தான் துளிர்விட்டு போச்சு: பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!

ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு துளிர்விட்டு போய்விட்டதாக அமைச்சர் ஜெயகுமார் கூறுகிறார். ஆனால் ஜெயலலிதா இல்லாததால் அமைச்சர்களுக்கே துளிர்விட்டு போன மாதிரிதான் இருக்கிறார்கள்  என தே.மு.தி.க பொருளாளர்  பிரேமலதா தெரிவித்துள்ளார். 

வேலூர்: ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு துளிர்விட்டு போய்விட்டதாக அமைச்சர் ஜெயகுமார் கூறுகிறார். ஆனால் ஜெயலலிதா இல்லாததால் அமைச்சர்களுக்கே துளிர்விட்டு போன மாதிரிதான் இருக்கிறார்கள்  என தே.மு.தி.க பொருளாளர்  பிரேமலதா தெரிவித்துள்ளார். 

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, ‘சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும். ஒரு திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு வெளியே வந்து ஓடிக்  கொண்டிருக்கும் போது  சில காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுக போராடுவது வேதனை அளிக்கக்கூடியது. சென்சார் செய்யப்பட்ட படம் வெளியே வந்துவிட்டு மீண்டும் காட்சிகளை நீக்குவதற்கு சென்சார் எதற்கு, சென்சார் செய்தவர்கள் தவறாக சென்சார் செய்துள்ளார்களா? என்ற கேள்வி எழுகிறது. 

ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு துளிர்விட்டு போய்விட்டதாக அமைச்சர் ஜெயகுமார் கூறுகிறார். ஆனால் ஜெயலலிதா இல்லாததால் அமைச்சர்களுக்கே துளிர்விட்டு போன மாதிரிதான் இருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். ஜெயலலிதா இருந்த போது அமைச்சர்கள் பாட்டு பாடினார்களா? நடனம் ஆடினார்களா? தீபாவளிக்கு வீடு வீடாக சென்று இனிப்பு வழங்கினார்களா?. டெங்கு, பன்றிகாய்ச்சல் உள்ளிட்ட மக்களின் பிரச்னை ஆயிரம்  இருக்கும் போது அதையெல்லாம் தீர்க்காமல், அமைச்சர்கள் ஒரு திரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் ஏன்? இனிவரும் காலத்தில் இது போன்று பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஓட்டு போட்டு வெற்றிபெற செய்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

திரைத்துறையில் இருப்பவர்களும் ஒரு படத்தை சர்ச்சைக்குள் கொண்டு போய் அதை ஓட வைக்க நினைக்கிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது. விஜய்க்கு அண்மை காலமாக இது போன்ற படங்கள்தான் வருகிறது. இனிவரும் காலங்களில் யோசித்து நடிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.