விஜய்க்காக பாடகராக மாறும் ஜூனியர் என்.டி.ஆர்

 

விஜய்க்காக பாடகராக மாறும் ஜூனியர் என்.டி.ஆர்

விஜய் தெலுங்கிலும் பரவலான ரசிகர்களைக் கொண்டுள்ளார். பிகில் படம் ‘Whistle’ என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது குட்டி ஸ்டோரி பாடலை தெலுங்கில் வெளியிட படக்குழு தயாராகி வருகிறது.

 

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் பாடல் ‘குட்டி ஸ்டோரி’ சில தினங்களுக்கு முன்பு வெளியானது. சில அனிமேஷன் காட்சிகளுடன் புது விதத்தில் அமைந்திருந்த இந்த லிரிக் வீடியோ நல்ல வரவேற்பைப் பெற்றது. விஜய் தன் ரசிகர்களுக்கு கூறும் அறிவுரையைப் போல இந்த பாடல் அமைந்திருந்து. வெளியானது முதல் இப்பொது வரையிலும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. 

kutti-story

விஜய் தெலுங்கிலும் பரவலான ரசிகர்களைக் கொண்டுள்ளார். பிகில் படம் ‘Whistle’ என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது குட்டி ஸ்டோரி பாடலை தெலுங்கில் வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. இந்த பாடலின் தெலுங்கு வெர்சனில் ஜூனியர் என்.டி.ஆர் பாட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கூடிய விரைவில் இந்த பாடலுக்கான ரெகார்டிங் இருக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கின் முன்னணி ஹீரோவான ஜூனியர் என்.டி.ஆர் இந்த பாடலைப் பாடுவதால் இந்த பாடல் தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.