விஜயவாடாவுக்கும்  வந்த கொரானா -வைரஸை விரட்ட மக்களை விழிப்புணர்வோடு இருக்க வேண்டுகோள் 

விஜயவாடாவுக்கும்  வந்த கொரானா -வைரஸை விரட்ட மக்களை விழிப்புணர்வோடு இருக்க வேண்டுகோள் 

விஜயவாடா நகரில் கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டதால்  விஜயவாடா மாவட்ட ஆட்சியர் இம்தியாஸ்  ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி  மாவட்ட உயர் அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்தினை நடத்தினார்கள். அந்த  கூட்டத்தில் இணை ஆட்சியர் மாதவி லதா, நகராட்சி ஆணையர் பிரசன்னா வெங்கடேஷ், டி.சி.பி விக்ராந்த் பாட்டீல் ஆகியோர் கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால், அந்தந்த பகுதிகளில் உயர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

vijayvaada

இந்தியா முழுவதும்  ஊரடங்கு உத்தரவை அடுத்து விஜயவாடா பண்டிட் நேரு பஸ் ஸ்டாண்ட் காலியாக உள்ளது. நள்ளிரவு முதல் தொலைதூர இடங்களுக்கான அனைத்து ஆர்டிசி பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. விஜயவாடா மற்றும் கிருஷ்ணா மாவட்டம் முழுவதும் பேருந்து சேவைகள் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ரத்து செய்யப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தவிர்க்க அனைத்து பயணிகளும் விழிப்புடன் இருப்பதை உறுதி செய்ய ஆந்திர அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

vijaywada meat

மறுபுறம், விஜயவாடாவில் ஞாயிற்றுக்கிழமையான இன்று   ஊரடங்கு உத்தரவால்  பெரும்பான்மையான கடைகள் மூடப்பட்ட போதிலும், நகர மக்கள் காலை நேரங்களில் கோழி மற்றும் ஆட்டிறைச்சி வாங்க திறந்திருந்த  இறைச்சி கடைகளுக்கு திரண்டனர்.cமாநகராட்சியின் அதிகாரிகள் அந்த  இறைச்சி கடைகள் மற்றும் மீன் சந்தைகளில் சோதனைகளை மேற்கொண்டு கடைகளை மூடினர்