விஜயகாந்த் – ஸ்டாலின் சந்திப்பில் அரசியல் பேசப்பட்டது: உண்மையை உடைத்த பிரேமலதா

 

விஜயகாந்த் – ஸ்டாலின் சந்திப்பில் அரசியல் பேசப்பட்டது: உண்மையை உடைத்த பிரேமலதா

மு.க.ஸ்டாலின்- விஜயகாந்த் சந்திப்பில் அரசியல் பேசப்பட்டது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை: மு.க.ஸ்டாலின்- விஜயகாந்த் சந்திப்பில் அரசியல் பேசப்பட்டது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், சில தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார். அவரை அரசியல் கட்சித் தலைவர்களும், திரைத்துறை பிரபலங்களும் நட்பு ரீதியாக சந்தித்து வருகின்றனர். அதன்படி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.

இதனிடையே சமீபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘விஜயகாந்த் உடல் நலம் பற்றி மட்டும் விசாரித்தேன். அவரை மனிதாபிமான உணர்வோடுதான் சந்தித்தேன். நீங்கள் நினைப்பது போல எதுவும் பேசவில்லை’ என்றார். 

vijayakanth

இந்நிலையில் சென்னையில் இன்று தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘எந்த கட்சியுடன் கூட்டணி என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. விஜயகாந்த் உரிய முடிவை அறிவிப்பார். விஜயகாந்த் – மு.க.ஸ்டாலின் சந்திப்பில் உடல்நலம் பற்றி மட்டுமே பேசப்படவில்லை. அனைத்து விஷயங்களும் பேசப்பட்டது. விஜயகாந்த்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்ததற்கு தேமுதிக சார்பில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார். 

முன்னதாக விஜயகாந்தை சந்தித்த ஸ்டாலின் கூட்டணி குறித்து பேசவில்லை என்று கூறியிருந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் ஸ்டாலின் சந்திப்பில் அரசியல் உள்ளது என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.