விஜயகாந்த் வந்தும் தீர்க்க முடியாத திடீர் சோதனை… அலறும் தேமுதிக நிர்வாகிகள்..!

 

விஜயகாந்த் வந்தும் தீர்க்க முடியாத திடீர் சோதனை… அலறும் தேமுதிக நிர்வாகிகள்..!

உடல்நலக் குறைவால் விஜயகாந்த் வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார். இதனால், நீண்ட தூரம் பயணித்து அவர் திருப்பூர் மாநாட்டுக்கு வருவாரா?

செப்டம்பர் 15-ம் தேதி தே.மு.தி.க., முப்பெரும் விழா பொதுக்கூட்டம் திருப்பூரில் நடைபெற இருக்கிறது.

உடல்நலக் குறைவால் விஜயகாந்த் வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார். இதனால், நீண்ட தூரம் பயணித்து அவர் திருப்பூர் மாநாட்டுக்கு வருவாரா? என்று தேமுதிக தொண்டர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்தது. 
இந்நிலையில், விஜயகாந்த் கலந்துகொள்ளும் தகவலை உறுதிபடுத்தி இருக்கிறார் விஜய பிரபாகரன். இதனைக் கேட்டு தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

vijayakanth

ஆனாலும் இன்னொரு சிக்கல். விஜயகாந்த், நலமுடன் இருந்தபோது தொண்டர்கள், தானாவே கூட்டத்துக்கு வந்து சேர்ந்து விடுவர். சமீப காலமாக தே.மு.தி.க., நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் சேர்வது இல்லை. திருப்பூர் விழாவும், அந்த மாதிரி சொதப்பி விடக் கூடாது என்பதில் பிரேமலதா உறுதியாக இருக்கிறார்.

அதனால், திருப்பூரை சுற்றி இருக்கிற 10 மாவட்டங்களில்  இருந்தும்  தலா 2,000 பேரை அழைத்துக் கொண்டு வரவேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டிருக்கிறார். 2,000 பேருக்கு, வாகனம், சாப்பாட்டு செலவுக்கு என்ன செய்வது என  மாவட்ட நிர்வாகிகள், கையை பிசைந்து கொண்டு நிற்கிறார்கள். பாவம் 20 ஆயிரம் பேரை திரட்ட அவர்களும் என்ன செய்வார்கள்.