விஜயகாந்த் தவிர மற்றவர்கள் முடிவு எடுக்கிறார்கள்; தேமுதிக குறித்து கஸ்தூரி

 

விஜயகாந்த் தவிர மற்றவர்கள் முடிவு எடுக்கிறார்கள்; தேமுதிக குறித்து கஸ்தூரி

நுகர்வோர் குரல் அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட நடிகை கஸ்தூரி, விஜயகாந்த் தவிர தேமுதிகவில் மற்றவர்கள் எல்லாம் முடிவு எடுக்கிறார்கள் என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

சேலம்: நுகர்வோர் குரல் அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட நடிகை கஸ்தூரி, விஜயகாந்த் தவிர தேமுதிகவில் மற்றவர்கள் எல்லாம் முடிவு எடுக்கிறார்கள் என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக இயங்கி வரும் கஸ்தூரிக்கு, சமீப காலமாக பட வாய்ப்புகள் ஏதுமில்லை. ஆனாலும் அவர் ஊடக வெளிச்சத்திலேயே இருக்கிறார். அரசியல், சினிமா என அவர் கருத்து சொல்லாத தளங்களே இல்லை எனும் அளவு கருத்து சொல்லி வருகிறார். இந்நிலையில், சேலத்தில் நடைபெற்ற நுகர்வோர் குரல் அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட நடிகை கஸ்தூரி, தேமுதிக குறித்து விமர்சித்துள்ளார்.

தேமுதிக குறித்து அவர், தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாததால் அக்கட்சியில் அவரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் முடிவு எடுக்கிறார்கள். இது அந்த கட்சியின் வளர்ச்சிக்கு உதாவது என கூறியிருக்கிறார்.