விஜயகாந்த்தால் மீண்டும் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால்! – பிரேமதலா சொல்கிறார்

 

விஜயகாந்த்தால் மீண்டும் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால்! – பிரேமதலா சொல்கிறார்

தே.மு.தி.க கொடி அறிமுகம் செய்யப்பட்டதன் 20வது ஆண்டு விழா பிப்ரவரி 12ம் தேதி கொண்டாடப்பட்டது. விழாவில் விஜயகாந்த் பங்கேற்று கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
அப்போது அவர், “இன்றைக்கு எத்தனையோ மாநிலங்களில் யார் யாரோ முதலமைச்சர்களாக வருகிறார்கள்.

விஜயகாந்த் கூறியதை வைத்துத்தான் டெல்லியில் ஆம் ஆத்மி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது என்று தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

dmdk

தே.மு.தி.க கொடி அறிமுகம் செய்யப்பட்டதன் 20வது ஆண்டு விழா பிப்ரவரி 12ம் தேதி கொண்டாடப்பட்டது. விழாவில் விஜயகாந்த் பங்கேற்று கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
அப்போது அவர், “இன்றைக்கு எத்தனையோ மாநிலங்களில் யார் யாரோ முதலமைச்சர்களாக வருகிறார்கள். விஜயகாந்த் சொன்ன திட்டங்களை பின்பற்றித்தான் அவர்களால் வெற்றி பெற முடிந்தது. எங்களின் முதல் தேர்தல் அறிக்கையிலேயே, வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும் என்று சொன்னோம். விஜயகாந்த்தின் இந்த அறிவிப்பைத்தான் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி நடைமுறைப்படுத்துகிறார்.

dmdm-party

லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான அரசு என்று விஜயகாந்த் கூறியதை வைத்துத்தான் கெஜ்ரிவால் இன்று முதல்வராகியுள்ளார். தமிழக மக்களுக்கு உழைக்கும் சிறந்த தலைவர் விஜயகாந்த் மட்டுமே. அவருடைய ஒவ்வொரு கொள்கையையும் மற்ற மாநிலங்கள் பயன்படுத்துகின்றன. எங்களுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைத்தால் லட்சம் வாக்குறுதிகளை நிறைவேற்றி தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக மாற்றி இருப்போம். விஜயகாந்தை தவறவிட்டுக்கொண்டிருப்பது தமிழக மக்கள்தான். இனி வரும் காலங்களிலாவது நல்ல தலைவரை மக்கள் அங்கீகரிக்க வேண்டும். தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவை மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், மொழியின் பெயரால் தூண்டுகின்ற அரசியல் கட்சிகள் தான் இன்றைக்கு இருக்கின்றன. ஒன்றே குலம் ஒரே தேவன் என்று சொல்லக் கூடிய ஜாதி, இனம், மதம், மொழிக்கு அப்பாற்பட்டு செயல்படக் கூடிய ஒரே தலைவர் விஜயகாந்த்.  கூட்டணி தர்மத்தை என்றைக்கும் விஜயகாந்த் மதிப்பவர்.  கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளும் அந்த தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.