விஜயகாந்தை விடுங்க…  தலித் தலைவர்களை விட நான் அவ்வளவு இளக்காரமா..? மீது ராமதாஸ் கடுங்கோபம்..!

 

விஜயகாந்தை விடுங்க…  தலித் தலைவர்களை விட நான் அவ்வளவு இளக்காரமா..?  மீது ராமதாஸ் கடுங்கோபம்..!

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலில் ஆதரவு கேட்டு அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி எல்லாம் விஜயகாந்த் வீட்டுக்கு போய் பேசிவிட்டு வந்தார்கள்.

விக்கிரவாண்டியில் தே.மு.தி.க.,வுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு இருக்கிறது. அங்கே, விஜயகாந்த் பிரசாரம் செய்தால் நன்றாக இருக்கும் என முதல்வரும், அமைச்சர்களும் நினைக்கிறார்கள். அதனால் ‘பிரசாரத்திற்கு நீங்க வந்தே தீரணும்’ என விஜயகாந்திடம், அமைச்சர்கள் அன்புக் கட்டளை போட்டுவிட்டு வந்திருக்கிறார்கள். 

இது ஒருபுறமிருக்க,  மக்களவை  தேர்தலில் பா.ம.க.,வோடு தான் அ.தி.மு.க., முதலில் கூட்டணியை உறுதிப்படுத்தியது. அதன் பிறகு தான்  பா.ஜ., – தே.மு.தி.க., கட்சிகளுடன் ஒப்பந்தம் போட்டார்கள். ஆனால் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் கூட்டணிக்கு, தே.மு.தி.க.,வை தான், அ.தி.மு.க., முதலில் நாடியிருக்கிறது.

edapadi and ramadoss

விழுப்புரத்தில் அந்த கட்சிக்கு செல்வாக்கு இருப்பதால் தான் ஆளும்கட்சி ஆர்வம் காட்டுறது. இதைக் கேள்விப்பட்டு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ‘டென்ஷன்’ ஆகி கிடக்கிறார் ‘நமக்கும், தொகுதியில் கணிசமான ஓட்டு இருக்கு. என்னோட வீடே, விழுப்புரம் மாவட்டத்தில் தான் இருக்கிறது. என்னை கண்டுகொள்ளாமல் அங்கே போய் இருக்கிறார்கள் எனக் கோபட்ட ராமதாஸ் இப்போது அதிமுக மீது மேலும் கோபத்தில் இருக்கிறார்.

விஜயகாந்த்தை போய் சந்தித்ததற்கே இவ்வளவு கோபப்படுகிறார் என்றால், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தலித் அமைப்பை சேர்ந்த ஜான் பாண்டியன் வரை இரண்டாம் கட்டத் தலைவர்களை அதிமுக அமைச்சர்கள் போய் சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். ஆனால் ராமதாஸை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. காரணம், நாங்குநேரியில் பாமகவுக்கு ஆதரவாளர்களே இல்லை. விக்கிரவாண்டியில் பாமக ஆதரவு தெரிவித்து அதனால் அங்கிருக்கும் தலித் மக்கள் வாக்கு வங்கியை பாதிக்கும். 

அத்தோடு அந்த மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் வன்னியர் என்பதால் வன்னியர்களின் வாக்குகளை ராமதாஸ் இல்லாமலேயே அறுவடை செய்யலாம் எனக் கணக்குப் போட்டே ராமதாஸை இந்த இடைத்தேர்தலில் ஓரம் கட்டி இருக்கிறது அதிமுக. இதனால் கொதித்துப்போன ராமதாஸ் பாமகவை கூட்டணியில் இருந்து அதிமுக, ‘கழற்றி’விட பார்க்கிறதோ என்கிற சந்தேகப்படுவதாக கூறுகிறார்கள்.  இதெற்கெல்லாம்  கவலைப்படலாமா? அ.தி.மு.க., இல்லை என்றால் தி.மு.க.! அது தானே பாமகவின் கொள்கை.