விசிட்டிங் கார்டு போல பெருகும்  போலி ஆதார் கார்டு -முதல்வரின் பி .ஏ .வும் மாட்டினார் -கள்ள நோட்டைவிட ஆதாயம் தரும் கள்ள ஆதார் கார்டு.. 

 

விசிட்டிங் கார்டு போல பெருகும்  போலி ஆதார் கார்டு -முதல்வரின் பி .ஏ .வும் மாட்டினார் -கள்ள நோட்டைவிட ஆதாயம் தரும் கள்ள ஆதார் கார்டு.. 

மாநில காவல்துறையின் சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்) போலியாக தயாரிக்கப்பட்ட 25,000 பேரின்  மின்னணு தரவுகளையும், அவர்களின் தொலைபேசி எண்கள், ஆதார் மற்றும் பான் விவரங்களையும், தனித்தனி ஆதார் பட்டியலையும், மேலும் 6,000 பேரின் பான் விவரங்களையும் மீட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உ .பி .யில் போலி ஆதார் மற்றும் பான் கார்டுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் வங்கிகளை மோசடி செய்த இருவர், கிரேட்டர் நொய்டா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். மாநில காவல்துறையின் சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்) போலியாக தயாரிக்கப்பட்ட 25,000 பேரின்  மின்னணு தரவுகளையும், அவர்களின் தொலைபேசி எண்கள், ஆதார் மற்றும் பான் விவரங்களையும், தனித்தனி ஆதார் பட்டியலையும், மேலும் 6,000 பேரின் பான் விவரங்களையும் மீட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

fake adhar

.”இது  தவிர, போலி ஆதார் அட்டைகள், போலி பான் கார்டுகள், போலி கிரெடிட் கார்டுகள், பல்வேறு நிறுவனங்களின் போலி சம்பள சீட்டுகள் மற்றும் வேறு சில ஆவணங்கள் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன” என்று எஸ்.டி.எஃப் துணை போலீஸ் சூப்பிரண்டு  தெரிவித்தார்.
மேலும் அப்போதைய சத்தீஸ்கர் முதலமைச்சரின் தனிப்பட்ட உதவியாளரும் அவர்களிடம் மாட்டிக்கொண்டார் .அவரையே ஏமாற்றிய  அவர்கள்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்று அந்த அதிகாரி கூறினார்.
அவர்களுக்கு  எதிராக பிஸ்ராக் காவல் நிலையத்தில் புதிய எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் இது தொடர்பான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.