விசா முறைகேடு; இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூவர் அமெரிக்காவில் கைது

 

விசா முறைகேடு; இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூவர் அமெரிக்காவில் கைது

அமெரிக்காவில் வெளிநாட்டவர் தங்கி வேலை செய்வதற்கு H-1B விசா வழங்கப்படுகிறது. இந்தியாவில் ஐடி ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் H-1B விசாக்கள் அமெரிக்க அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது .

அமெரிக்காவில் வெளிநாட்டவர் தங்கி வேலை செய்வதற்கு H-1B விசா வழங்கப்படுகிறது. இந்தியாவில் ஐடி ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் H-1B விசாக்கள் அமெரிக்க அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது . அதை பெறுவதற்கு பெரும் போட்டியே நிலவும்.

america

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும். அமெரிக்கர்களையே பணியமர்த்த வேண்டும் என்ற கொள்கையை செயல்படுத்த முடிவு செய்தார்.  அதனால் அமெரிக்காவில் மற்ற நாட்டினர் பணியாற்றுவதை குறைக்கும் நடவடிக்கையில் அமெரிக்க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 

அந்த வகையில் இப்போது H-1B விசாக்களை வழங்குவதில் அமெரிக்க அரசாங்கம் புது விதிகளை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமலுக்கு கொண்டு வந்தது.  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிஷோர் தட்டப்புறம், குமார் அஸ்வபதி மற்றும் சந்தோஷ் கிரி ஆகியோர் நானோசிமாண்டிக்ஸ் எனும் கன்சல்டன்ஸி எனும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

h1b

அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவனங்களில் வேலை இருப்பதாக கூறி பலரிடம் பணிக்கான அப்ளிகேஷனை வாங்கிக் கொண்டு போலி H-1B விசாவினை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளனர்.  பணிக்கு ஆட்கள் எடுப்பதாக கூறப்பட்ட பெரிய  நிறுவனங்களில் அப்படி எந்த பணியும் இல்லை எனவும், அந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

america

இதை கண்டறிந்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் வாசிங்க

‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ புத்தகம் வெளியானது: 8 ஆயிரம் பிரதிகள் விற்பனை!