‘விசாறம்’ டீசர் வெளியீடு!

 

‘விசாறம்’ டீசர் வெளியீடு!

அறிமுக இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விசாறம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை இயக்குநர் கவுதம் மேனன் வெளியிட்டார்.

சென்னை: அறிமுக இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விசாறம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை இயக்குநர் கவுதம் மேனன் வெளியிட்டார்.

பிமாஸ் எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் ஜெனீதன் மூவீஸ் நிறுவனத்துடன் இணைந்து சரவணன் தயாரிக்கும் புதிய படம், ஒரே இரவில் நடக்கும் மூன்று சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தில் புதுமுக நடிகர்கள் சாய் மற்றும் சுதன், ராஜன், அசார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இயக்குநர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார்.  இசையமைப்பாளர் மெய்யப்பன் இசையமைக்க, மெர்லின் பாபு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்துக்கு ரஞ்சித் படத்தொகுப்பு செய்கிறார்.