விசாகபட்டின சம்பவம்… வேதனை வெளியிட்ட விஜயகாந்த்

 

விசாகபட்டின சம்பவம்… வேதனை வெளியிட்ட விஜயகாந்த்

விசாகப்பட்டினம் அருகே இயங்கி வரும் LG பாலிமர் ரசாயன ஆலையில் வாயுக்கசிவால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு 8 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியானார்கள், மேலும் பலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்

விசாகபட்டினம் ரசயான ஆலையில் இருந்து வெளியேறிய விஷ வாயுவால் 10 பேர் உயிரிழந்ததற்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

vijayakant

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், “விசாகப்பட்டினம் அருகே இயங்கி வரும் LG பாலிமர் ரசாயன ஆலையில் வாயுக்கசிவால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு 8 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியானார்கள், மேலும் பலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிற செய்திகேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். 

vizag-gas-leak-89

ஆந்திரஅரசு உடனடியாக கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றவேண்டும். மத்திய மாநில அரசுகள் இது போன்ற விபத்துகள், எதிர்காலத்தில் நேராதவண்ணம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.