விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த தமிழ்நாடு இளைஞர்: குவியும் பாராட்டுகள்!

 

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த தமிழ்நாடு இளைஞர்: குவியும் பாராட்டுகள்!

கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்க முயன்ற விக்ரம் லேண்டர் கட்டுப்பாட்டை இழந்து நிலவின் மேற்பரப்பில் விழுந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்க முயன்ற விக்ரம் லேண்டர் கட்டுப்பாட்டை இழந்து நிலவின் மேற்பரப்பில் விழுந்தது. அதனைக் கண்டுபிடிக்க, இஸ்ரோ தீவிர முயற்சி மேற்கொண்டும் எந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை. அதன் பிறகு, செப். 17, அக்.14,15, நவ.1 ஆம் தேதி நாசா தங்களது செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தது.

lander

மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் சென்னை தரமணியில் லினக்ஸ் கணினி நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.இவர் நாசா வெளியிட்ட அந்த புகைப்படங்களை ஆய்வு செய்ததில்,  விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருப்பதாக நாசாவிற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

laner

அதற்கு நாசா ,அவர் கூறியதன் படி அது விக்ரம் லேண்டரின் பாகம் தான் என்று கூறி அவருக்குப் பாராட்டு தெரிவித்து பதில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. மிகப்பெரிய விண்வெளி மையமான நாசாவே கண்டு பிடிக்க முடியாத ஒன்றை, தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவன் கண்டுபிடித்ததற்கு அனைவரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.