“விக்ரம் லேண்டரை ஏற்கனவே இஸ்ரோவின் ஆர்பிட்டர் கண்டுபிடித்து விட்டது” : இஸ்ரோ தலைவர்

 

“விக்ரம் லேண்டரை ஏற்கனவே இஸ்ரோவின்  ஆர்பிட்டர் கண்டுபிடித்து விட்டது” : இஸ்ரோ தலைவர்

செப். 17, அக்.14,15, நவ.1 ஆம் தேதி அமெரிக்க விண்வெளி மையமான நாசா தங்களது செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்க முயன்ற விக்ரம் லேண்டர் கட்டுப்பாட்டை இழந்து நிலவின் மேற்பரப்பில் விழுந்தது. அதனைக் கண்டுபிடிக்க, இஸ்ரோ தீவிர முயற்சி மேற்கொண்டும் எந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை என்று கூறப்பட்டது. இஸ்ரோவுடன் இணைந்து நாசாவும் முயற்சிகளை மேற்கொண்டது. அதன் பிறகு, செப். 17, அக்.14,15, நவ.1 ஆம் தேதி அமெரிக்க விண்வெளி மையமான நாசா தங்களது செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தது.

ttn

அதில், மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன்  இன்ஜினியர் சுப்பிரமணியன், நாசா வெளியிட்ட புகைப்படங்களில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருப்பதைக் கண்டுபிடித்ததாக நேற்று நாசா பதிவு ஒன்றை வெளியிட்டது. இதற்காக சுப்ரமணியனுக்குப் பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வந்தது. 

 ttn

இந்நிலையில், இது குறித்து இஸ்ரோ தலைவன் சிவன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை இஸ்ரோவின் ஆர்பிட்டர் கண்டுபிடித்து விட்டது. கடந்த செப்டெம்பர் மாதமே இஸ்ரோ ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து விட்டதாகப் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளோம். வேண்டுமானால் அதனை பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

ttn

அந்த ட்விட்டர் பதிவில், விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை ஆர்பிட்டர் கண்டுபிடித்து விட்டது. அதனுடன் தொடர்பு கொள்ளும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரோ வெளியிட்ட அந்த தகவலை சரிபார்க்காமல் நாசா, விக்ரம் லேண்டரை நாங்கள் தான் கண்டுபிடித்துள்ளோம் என்று எவ்வாறு தெரிவித்தது என கேள்வி எழுந்துள்ளது.