விக்ரமுக்கு சம்பள பாக்கி வைத்தாரா கமல்?

 

விக்ரமுக்கு சம்பள பாக்கி வைத்தாரா கமல்?

அரசியல் பணி, பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் என நெருக்கடியான நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் கமல்ஹாசன் தயாரித்திருக்கும் படம்

ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் நாளை வெளியாக உள்ள ‘கடாரம் கொண்டான்’படத்தின் சம்பள பாக்கி விக்ரமுக்கு முழுமையாக செட்டில்பண்ணப்படவில்லை என்று தெரிகிறது.

விக்ரமுக்கு கடைசியாக வெளியான ‘இருமுகன்’,’ஸ்கெட்ச்’,’சாமி2’ ஆகிய மூன்று படங்களுமே கமர்சியலாக படுதோல்வி அடைந்த படங்கள் என்பதால்  கமலின் தயாரிப்பான ‘கடாரம் கொண்டான்’விற்பனையாவதில் பெரும் இழுபறி ஏற்ப்பட்டதாகவும் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

kadaram kondan

அரசியல் பணி, பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் என நெருக்கடியான நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் கமல்ஹாசன் தயாரித்திருக்கும் படம். ராஜ்கமல் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் படங்களுக்கு சந்திரஹாசன் இணை தயாரிப்பாளராக இருப்பார். அவர் காலமாகிவிட்டதால் அவர் பங்கு பெறாத முதல் படமாகத் தயாராகி இருக்கிறது கடாரம் கொண்டான். இதனால் சரியான நேரத்தில் இப்படத்தின் வியாபாரம் தொடங்கப்படவில்லை.

kamal

 விக்ரம், கமல் மகள் அக்க்ஷரா ஹாசன் நடித்துள்ள கடாரம் கொண்டான் படத்தை முதல் பிரதி அடிப்படையில் டிரைண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்குத் தயாரித்துக் கொடுத்துள்ள இந்தப் படத்தின் தமிழக உரிமை மொத்தமாகவோ, ஏரியா அடிப்படையிலோ அவுட்ரேட் முறையில் வியாபாரம் நடைபெறவில்லை.விக்ரம் இரட்டை வேடங்களில் நாயகனாக நடித்து 2016 இறுதியில் வெளியான ’இருமுகன்’ அதன்பின் அவரது நடிப்பில் 2018ஆம் வெளியான ஸ்கெட்ச், சாமி – 2 ஆகிய மூன்று  படங்களும் வசூல் அடிப்படையில் தோல்வியைத் தழுவிய படங்கள் என்கிற முக்கிய காரணம் போக இப்பட இயக்குநரின் முந்தைய படமான ‘தூங்காவனமும் ஒரு தோல்விப்படம்.

kadaram kondan

இதனால் நாளை ரிலீஸாகவிருக்கும் ‘கடாரம் கொண்டானுக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் அவ்வளவாக ஆர்வம் இல்லையாம். கடந்த வாரம் வரை இப்படம் தமிழகத்தின் ஒரு ஏரியாவில் கூட விலைபோகாத நிலையில் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸே தமிழகம் முழுவதும் படத்துக்கு தியேட்டர்கள் எடுத்து ரிலீஸ் பண்ணுவதாகத் தகவல். சுமார் 25 கோடியில் தயாராகியிருக்கும் இப்படத்தின் சாட்டிலைட் உரிமை மூலம் வரும் பணத்தைத் தவிர கமலுக்கு வேறு எதுவும் தேறாது என்கிறார்கள் படத்தைப் பார்த்தவர்கள். இந்த நிலவரத்தைக் கருத்தில் கொண்டு விக்ரமுக்கு இறுதி நேரத்தில் தரவேண்டிய சம்பளம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.