விக்ரமின் 58வது படத்தில் இணைந்த ஏ.ஆர். ரஹ்மான் 

 

விக்ரமின் 58வது படத்தில் இணைந்த ஏ.ஆர். ரஹ்மான் 

விக்ரம் நடிப்பில் உருவாக்கவுள்ள 58வது படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . 

சென்னை: விக்ரம் நடிப்பில் உருவாக்கவுள்ள 58வது படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . 

சாமி 2 படத்தை அடுத்து இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் நடித்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. 

இந்தப் படத்தை அடுத்து இமைக்கா நொடிகள், டிமாண்டி காலனி போன்ற படங்களிலன் மூலம் சினிமாவில் முத்திரை பதிச்ச இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் விமரின் 58வது படமாகும். 

இந்த நிலையில் படத்துக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், இதில் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து  ஆகஸ்ட் மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. பின்பு 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.