விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக அபார வெற்றி…!

 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக அபார வெற்றி…!

அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தமிழ் செல்வன் 43,175 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் புகழேந்தியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் இன்று காலை 8 மணிக்குத் துவங்கியது. இந்த தேர்தலில், திமுக சார்பாகப் புகழேந்தியும் அதிமுக சார்பாக முத்தமிழ் செல்வனும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கைக்கான 20 சுற்றுகளின் எண்ணிக்கை முடிவில் அதிமுக 1,13,428 வாக்குகளும், திமுக 68,646 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 2,826 வாக்குகளும் பெற்றுள்ளன. 

ADMK

அதன் படி, அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தமிழ் செல்வன் 44,782 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் புகழேந்தியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளார். அதிமுக முன்னிலை எனத் தெரிந்ததுமே இனிப்புகள் வழங்கி கொண்டாடிய அதிமுக தொண்டர்கள், அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.