விக்கிரவாண்டியில் தோற்றே இருக்கலாம்! வெற்றியடைந்தது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் உள்ளது – அதிமுக குமுறல்

 

விக்கிரவாண்டியில் தோற்றே இருக்கலாம்! வெற்றியடைந்தது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் உள்ளது –  அதிமுக குமுறல்

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே இரண்டு தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை பெற்றிருந்தது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே இரண்டு தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை பெற்றிருந்தது. இருப்பினும் பின்வரும் சுற்றுகளில் திமுக முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக அதிமுகவே முன்னிலையில் இருந்தது. 

Nanguneri and vikravandi

இறுதியில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக அபார வெற்றி பெற்றது. இதில் என்னவொரு வருத்தம் என்றால் இந்த இரு தொகுதிகளுமே திமுக கூட்டணி வசம் இதுவரை இருந்தது. இவை தற்போது அதிமுக வசம் சென்றுவிட்டன. பணம் ஒரு பக்கம் ஜாதி ஒரு பக்கம் என இரு தொகுதிகளிலும் வித்தியாசமான பிரச்சினைகளை திமுக களத்தில் சந்தித்தது. நடுவில் ராமதாஸ் குழப்பிய குட்டையாலும், அதிமுகவின் பணபலத்தாலும் அதிமுக வசம் சென்றுள்ளது விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகள். 

Ramadoss

ஆனால் விக்கிரவாண்டியில் அதிமுக தோற்றிருந்தால் அந்த கட்சிக்கு சாதமாக அமைந்திருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் ஜெய்த்ததால் புது தலைவலி அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ளது. திமுகவிடம் ஜெயித்து ஸ்டாலின் முன் காலரை தூக்கிவிட்டாலும் ராமதாஸ் முன் தலைகுனிந்து போகவேண்டிய நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. அதற்கு காரணம் விக்கிரவாண்டித் தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். 

ADMK

அந்த தொகுதியில் அதிமுக வெற்றிப்பெற்றதால் அதிமுகவின் வெற்றிக்கு வன்னியரே காரணம் என பாமக வெற்றியை பங்குப்போட்டுக்கொண்டுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி பாமகவினர் உள்ளாட்சித் தேர்தலில் பலமாக சீட்டுக்கேட்க வாய்ப்புள்ளதால் அதிமுக தலைகள் நடுக்கத்தில் உள்ளன. பாமகவிடமிருந்து தப்பிக்க அந்த தொகுதியில் தோற்றே இருக்கலாம் என்கின்றனர் அதிமுகவினர்… சும்மாவே ராமதாஸ் ஆடுவார் இப்போது அதிமுகவுக்கு ஓட்டுவாங்கிக்கொடுத்துவிட்டோம் எனக் கூறி சலங்கையுடன் ஆடுவார் என்றே கூறப்படுகிறது.