விக்கிபீடியா கட்டுரை போட்டி: இந்திய மொழிகளை பின்னுக்குத்தள்ளி தமிழ் மொழி முதலிடம்!

 

விக்கிபீடியா கட்டுரை போட்டி: இந்திய மொழிகளை பின்னுக்குத்தள்ளி தமிழ் மொழி முதலிடம்!

விக்கிபீடியா இணையதளம் நடத்திய கட்டுரைப் போட்டியில் தமிழ் மொழி அதிக கட்டுரைகளைக் கொண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சென்னை: விக்கிபீடியா இணையதளம் நடத்திய கட்டுரைப் போட்டியில் தமிழ் மொழி அதிக கட்டுரைகளைக் கொண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது.

விக்கிபீடியா மற்றும் கூகுள் இணையதளங்கள் இணைந்து 3 மாதங்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்துகிறது. அதன்படி அக்.10, 2019 முதல் ஜன.10, 2020 காலகட்டத்தில் வேங்கைத் திட்டம் என்ற ஒரு கட்டுரைப் போட்டி நடந்தது. கொடுக்கும் தலைப்பில் 300 வார்த்தைகளுக்குள் எழுத வேண்டும், கூகுள் மொழி பெயர்ப்பை பயன்படுத்தக் கூடாது, மற்ற மொழி பெயர்ப்பு கருவிகளையும் பயன்படுத்தக் கூடாது, தகவல்கள் நிறைந்து இருக்க வேண்டும் ஆகியவை விதிமுறைகள் இந்தப் போட்டியில் விதிக்கப்பட்டது.

ttn

இந்நிலையில், நடந்து முடிந்த விக்கிபீடியா வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ் மொழி முதலிடத்தை பெற்று அசத்தியுள்ளது. 62 விக்கிப்பீடியர்கள் தமிழ் சார்பாகப் பங்கெடுத்து 2942 கட்டுரைகளை எழுதி தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு சமூக வலைதளங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த நெட்டிசன்கள் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.  மேலும் இந்தப் போட்டியில் எழுதப்பட்ட தமிழ் மொழியின் கட்டுரைகளானது இந்திய மொழிகளில் மொத்தம் எழுதப்பட்ட கட்டுரைகளில் இது 24% ஆகும்.