வாழ்வோ, சாவோ என வீரமொழி பேசும் விஜய் சேதுபதி!  அதிரவைக்கும் சைரா நரசிம்ம ரெட்டி ட்ரைலர்! 

 

வாழ்வோ, சாவோ என வீரமொழி பேசும் விஜய் சேதுபதி!  அதிரவைக்கும் சைரா நரசிம்ம ரெட்டி ட்ரைலர்! 

ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப்போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் சீரஞ்சிவி, அமிதாப்பச்சன்,விஜய்சேதுபதி, சுதீப், ஜெகபதிபாபு, நயன்தாரா, தமன்னா ஆகிய முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் அனுஷ்கா நடித்துள்ளார். இந்த படத்தை சீரஞ்சிவியின் மகனும், நடிகருமான ராம்சரண் தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தினை தமிழில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

nayanthara

அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று இப்படம் திரைக்குவரவுள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதி பேசும் விஜயமோ அல்லது வீரமோ என்ற வசனம் ரசிகர்கள் மத்தியில் சுந்திர போராட்ட தாகத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. சைரா படத்தின் ட்ரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே ட்விட்டரில் #SyeRaaTrailer என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகிவருகிறது.