வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தளபதி; நடிகர் ரஜினிகாந்த்

 

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தளபதி; நடிகர் ரஜினிகாந்த்

பிறந்தநாள் வாழ்த்து கூறிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்

சென்னை: பிறந்தநாள் வாழ்த்து கூறிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அரசியால் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கம், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் அவருக்கு சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

அந்த வகையில், “திரையுலக சூப்பர் ஸ்டாரும், அருமை நண்பருமான ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்! நலமுடன்!” என திமுக தலைவர் ஸ்டாலின் ரஜினிகாந்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், “வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தளபதி அவர்களே. உங்கள் நண்பன், ரஜினிகாந்த்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.