வாழ்க்கை எப்படி வாழவேண்டும் ?

 

வாழ்க்கை எப்படி வாழவேண்டும் ?

சிலரிடம் நிறைய பணம் இருக்கும். ஆனால் சந்தோஷம் இருக்காது. பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்தாலும் சந்தோஷம் கிடைக்கவில்லை என்பார்கள். சிலரைச் சுற்றி உறவினர்களும், நண்பர்களும் இருப்பார்கள். ஆனாலும் வாழ்வில் நிம்மதி இருக்காது. பணம் இல்லாமலும், உறவுகள் இல்லாமலும் இந்த உலகில் சந்தோஷமாக தங்கள் வாழ்க்கையை வாழ்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். 

சிலரிடம் நிறைய பணம் இருக்கும். ஆனால் சந்தோஷம் இருக்காது. பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்தாலும் சந்தோஷம் கிடைக்கவில்லை என்பார்கள். சிலரைச் சுற்றி உறவினர்களும், நண்பர்களும் இருப்பார்கள். ஆனாலும் வாழ்வில் நிம்மதி இருக்காது. பணம் இல்லாமலும், உறவுகள் இல்லாமலும் இந்த உலகில் சந்தோஷமாக தங்கள் வாழ்க்கையை வாழ்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். 

people

நம்மில் நிறைய பேருக்கு வாழ்க்கையை ஆராதிக்கத் தெரியவில்லை. எப்போதும், நம்மிடம் எது இல்லையோ அதைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இப்படித் தான் பல நெடுங்காலத்துக்கு முன்பு ஜப்பான் நாட்டில் ஒரு அருமையான தொழிலாளி இருந்தார். அவர் தச்சு வேலை செய்து, கட்டமைக்கும் வீடுகள் எல்லாம் அத்தனை மிளிர்வோடு பார்ப்பவர்களை அதிசயிக்க வைக்கும். பல வருடங்களாக தன் எஜமானியிடம் வேலைப் பார்த்து வந்த தச்சருக்கு, வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவிக்கும் எண்ணம் எழுந்தது.
ஒரு நாள், தன் எஜமானனிடம் சென்று, தான் தன் குடும்பத்துடன் அமைதியாக எஞ்சிய காலத்தை கழிக்க விரும்புவதாகச் சொன்னார். அவர் நீண்ட நெடுங்காலங்களாக தன்னோடு இருப்பதால், அவரைப் பிரிய எஜமானருக்கு மனம் வரவில்லை. இருந்தாலும் தொழிலாளியின் நலனும், எண்ணமும் முக்கியம் என்பதால் அவரது கோரிக்கைக்கு சரியென்றார். கூடவே ஒரேயொரு கோரிக்கையையும் வைத்தார். 

japan

‘எனக்காக ஒரே ஒரு வீடு மட்டும் கட்டித் தர முடியுமா?’ என்று கேட்டார். ரொம்ப வருடங்களாக பணிபுரிந்த எஜமானார் கேட்டதும் தொழிலாளியால் மறுக்க முடியவில்லை. ஆனாலும் வேலை செய்வதில் நாட்டம் போய்விட்டது. இருந்தாலும் சரி என்று சம்மதித்தார். பெயருக்கு சம்மதம் தெரிவித்தாலும், வேலையில் அவருடைய மனம் ஆழ்ந்து ஈடுபடவில்லை. ஏனோ தானோவென்று மட்டமான பொருட்களைக் கொண்டு வீடு கட்டும் பணியை ஆரம்பித்தார். இத்தனைக் காலங்களாய் நேர்த்தியாய் வீடுகளை வடிவமைத்தவருக்கு, தன்னுடைய கடைசிப் பணியை அப்படி அசிரத்தையுடன் செய்ய நேர்ந்தது துரதிர்ஷ்டம் தான். எப்படியோ ஒரு வழியாக வீடு முழுவதையும் கட்டி முடித்ததும், எஜமானரிடம் தகவல் தெரிவித்தார்.
‘இன்னும் கூடுதல் செலவானாலும் பரவாயில்லை… வேறு என்னவெல்லாம் இருந்தால் வீடு இன்னும் அழகாக இருக்குமோ அதையெல்லாம் சேர்த்து உன் மன திருப்திக்கு வீட்டை முடித்துக் கொடு’ என்றார் எஜமானர்.
தொழிலாளி, விட்டால் போதும் என்கிற மனநிலையில் இருந்தான். ‘இல்லை.. இப்போதே வீடு பிரமாதமாக வந்திருக்கிறது. எனக்குத் திருப்தியில்லாமல் நான் எந்த வீட்டையும் கட்ட மாட்டேனே? வந்து வீட்டைப் பாருங்கள்.. உங்களுக்கும் வீடு பிடித்துப் போகும்’ என்றான். வீட்டின் சாவியை வாங்கிக் கொண்டு, ‘அரை மணி நேரம் கழித்து வா… வந்து வீட்டைப் பார்க்கிறேன்’ என்றார் எஜமானர்.

‘இன்னும் அரை மணி நேரம் காக்க வைக்கிறாரே’ எனும் எரிச்சலில் வாசலில் போய் அமர்ந்தான் தொழிலாளி. அரை மணி நேரம் கழிந்ததும், மீண்டும் அழைக்க சென்றான். ஒரு கவரில் கொஞ்சம் பணத்தையும், வீட்டின் சாவியையும் வைத்து அவனிடம் கொடுத்தார் எஜமானர். 
‘இதோ, நீ ஆசையாசையாய் உருவாக்கிய வீட்டின் சாவி! இந்த வீடு உனக்காக நான் அளிக்கும் பரிசு. இத்தனை வருடங்களாக எனக்காக உழைத்தாய். உன்னை வெறுங்கையோடு அனுப்புவதற்கு எனக்கு மனமில்லை. இந்த கவரில் கொஞ்சம்  பணமும் இருக்கிறது.  உனக்குப் பிடித்த வீட்டில் நீ எஞ்சிய காலங்களை சந்தோஷமாக வாழலாம்’ என்றார் எஜமானர்.  

house

தச்சனின் முகத்தில் அதிர்ச்சி! வெட்கம்! எல்லாம் கலந்து சங்கடப்படுத்தியது. அடடா, இது தனக்கான வீடு என்று முன்பே தெரிந்திருந்தால், நன்றாகக் கட்டியிருக்கலாமே? தான் மோசமாகக் கட்டிய வீட்டில், தானே வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டதே என்று கவலைப்பட்டான். 
மனிதர்களும் இப்படித்தான். தங்கள் வாழ்க்கையை ஏனோ தானோ வென்று வாழ்ந்து கழிக்கிறார்கள். தங்களுடைய திறமையை முழுமையாகப் பயன்படுத்தாமல் சோம்பலில் உழல்கிறார்கள். திறமை காட்ட வேண்டிய சந்தர்ப்பங்களைக் கோட்டைவிட்டு விடுகிறார்கள். நம் வாழ்க்கையும் அந்த வீட்டைப் போன்றதுதான். ஒவ்வொரு ஆணி அடிக்கும் போதும், மரத்துண்டுகளைச் சேர்க்கும் போதும் புத்திசாலித்தனத்தோடு செயல்படுங்கள். இந்த வாழ்க்கை உனக்காகத் தான், உனக்கு தான் அளிக்கப் பட்டுள்ளது. அதை நீயே உருவாக்குகிறாய். ஒரு நாள் நீ வாழ்ந்தாலும் அமைதியோடும் கவுரவத்தோடும் வாழ வேண்டும். வாழ்க்கை என்பது நமக்கு நாமே கட்டிக் கொள்ளும் வீடு.