வாழ்க்கையில் யாருக்கெல்லாம் நிச்சய ஏற்றம் வரும்?

 

வாழ்க்கையில் யாருக்கெல்லாம் நிச்சய ஏற்றம் வரும்?

29.09.2019 (ஞாயிற்றுக்கிழமை)
ராசி பலன்கள்
நல்ல நேரம்
காலை 6 மணி முதல் 7 வரை
மாலை 3 மணி முதல் 4 வரை
ராகு காலம்
மாலை 4.30 மணி முதல் 6 வரை
எமகண்டம்
பிற்பகல்  12 மணி முதல் 1.30 வரை
சந்திராஷ்டமம்
பூரட்டாதி, உத்திரட்டாதி
பரிகாரம் 
வெல்லம்
இன்று நவராத்திரி ஆரம்பம்

மேஷம் 
இன்று உங்கள் கிரக நிலைகளின் படி, உங்கள் விருப்பத்தின் படியே பெரும்பாலான விஷயங்கள் நடைபெறும். மிகவும் மகிழ்ச்சியான நாளாக இன்று அமையும். நவராத்திரி பூஜைகளை சிரத்தையுடன் மேற்கொள்ளுங்கள். வசந்தம் உங்கள் வாழ்வில் வீசத் தொடங்கியிருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்கிற நேரம் இது.எதிலும் அவசரப்படாமல், வருகின்ற பணவரவை ஆதாயமான விஷயங்களில் முதலீடு செய்து லாபம் பெறுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 4
ரிஷபம் 
நல்லதைவிட கெட்டதுதான் வேகமாக வெற்றி பெறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் இது. இன்று பல புதிய நிதி திட்டங்கள் உங்களிடம் வைக்கப்படும். கண்ணெதிரே குழப்பமான முடிவுகள் அலைமோதும். எதிலும் அவசரப்படாமல் தீர யோசித்து முடிவெடுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 3
மிதுனம் 
தகராறு செய்யும் உங்கள் நடத்தையால் பகைவர்களின் பட்டியல் நீளும். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சும்மாயிருந்தாலும், நிகழும் பிரச்சனைகளுக்கு ஏதோ ஒரு வகையில் நீங்கள் காரணமாக இருக்க நேரிடும். குடும்பத்தில் விரைப்பாக இருக்காதீர்கள்! அது அமைதியைக் கெடுக்கும். 
அதிர்ஷ்ட எண்: 1
கடகம் 
உடல் நலன் மேம்படும். நினைத்த காரியங்கள் இழுபறியாக இருந்தாலும், இறுதியில் நல்லபடியாக முடிவுறும். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும், பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். பயணத்தில் புதிய இடங்களை பார்ப்பீர்கள், முக்கியமானவர்களை சந்திப்பீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 5
சிம்மம் 
உங்களின் நம்பிக்கை வாசனை மிக்க மலரைப் போல, வாசனை திரவியத்தைப் போல மலரும். நிதிநிலை உயரும். வாழ்க்கை துணைவருடன் வாக்குவாதங்கள் எழும்.  இனிமையான மற்றும் அற்புதமான மாலை நேரத்துக்காக விருந்தினர்கள் உங்கள் வீட்டில் கூடுவார்கள். 
அதிர்ஷ்ட எண்: 3
கன்னி 
நினைத்ததெல்லாம் கைகூடி வருகிற நேரம் இது. ஆனால், உடனிருக்கும் நண்பர்களாலும், உறவினர்களாலும் நிதானத்தை இழக்க செய்யும் கிரகநிலைகள் உங்களை தடுமாற செய்யும். பணம் இருக்கிறதே என்று உடனடியாக செலவழிக்காமல், தீர யோசித்து அதிர்ஷ்டத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 1
துலாம் 
செய்யும் தொழில் ஏற்படும் வெற்றி உங்கள் நம்பிக்கையை உயர்த்தும். மாலையில் நண்பர்களுடன் இருப்பது நல்ல மகிழ்ச்சியைத் தரும், விடுமுறை திட்டமிடலுக்கும் நல்லது. குடும்பத்தில் குதூகலம் கூடும்.
அதிர்ஷ்ட எண்: 4
விருச்சிகம் 
உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, முடிந்தவரை சீக்கிரத்தில் அச்சத்தைப் போக்கிடுங்கள். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். நாளின் பிற்பகுதியில் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். நிதி நிலைமை மேம்படும். 
அதிர்ஷ்ட எண்: 5
தனுசு 
உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள்.  எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். வீட்டில் ஏதோ பிரச்சினை எழப் போகிறது. எனவே என்ன சொல்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். 
அதிர்ஷ்ட எண்: 2
மகரம் 
அசாதாரணமான சிலதை நீங்கள் செய்ய உங்கள் ஆரோக்கியம் இடம் தரும் என்பதால் விசேஷமான நாள். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். உறவினர்கள் வருகை, நீங்கள் நினைத்ததைவிட நல்லதாக இருக்கும். இந்த நாள் உங்களுக்கு ரோஜாக்களின் நறுமணத்தை வழங்கும். 
அதிர்ஷ்ட எண்: 2
கும்பம் 
கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். வேகமாக முடிவு எடுக்காதீர்கள்.  குறிப்பாக முக்கியமான நிதி பரிமாற்றங்களைப் பற்றி பேசும்போது. நண்பர்களும் உறவினர்களும் சாதகமான செயல்கள் செய்வார்கள், அவர்களுடன் இருப்பதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தினரின் அன்பு முழுமையாக கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 9
மீனம் 
ஜாலியாக இருக்க வெளியில் செல்வோருக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள். அணுகுமுறையில் தாராளமாக இருந்து குடும்பத்தினருடன் நேரத்தை அன்புடன் செலவிடுங்கள். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படும். 
அதிர்ஷ்ட எண்: 7