வாழைப்பழத்துக்கு பெயிண்ட் அடித்து செவ்வாழை என ஏமாற்றும் கும்பல் உஷார் மக்களே!

 

வாழைப்பழத்துக்கு பெயிண்ட் அடித்து செவ்வாழை என ஏமாற்றும் கும்பல் உஷார் மக்களே!

வாட்ஸப்பில் வலம் வருகிறது ஒரு வைரல் காணொளி. அதனை பிளே செய்து பார்த்தால் சாதாரண வாழைப்பழத்தின் தோலில் சிவப்பு நிறத்தை அடித்து ஏமாற்றுகின்றனர் வாழைப்பழ வியாபாரி.

கடையில் செவ்வாழைப்பழம் வாங்கிய ஒருவர், அதைத் தனது வீட்டுக்கு எடுத்துவந்து பார்த்தபோது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே அதனை சோப்பு நீரில் கழுவி பார்த்துள்ளார். அப்போது செவ்வாழையின் சிவப்பு நிறம் நீரில் கரைந்து அதன் உண்மை நிறமான மஞ்சளுக்கே மாறியுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், வாழைப்பழ தோலின் மீது சாயம் பூசப்பட்டிருந்ததை உணர்ந்தார். அவர் ஏமாந்ததுபோல் வேறுயாரும் ஏமாறக்கூடாது என்பதற்காக இந்த விஷயத்தை வீடியோவாக எடுத்து வாட்ஸப்பில் பகிர்ந்தார் அந்த நல்லுள்ளம் கொண்ட நபர். இந்த காணொலி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இனி செவ்வாழை வாங்கும்போது நிஜமாகவே அது செவ்வாழை தானா? அல்லது சாயம் பூசப்பட்ட வாழையா என பார்த்து வாங்குங்கள்….

 

 

பச்சைப் பட்டாணி என்ற பெயரில் காய்ந்த பட்டாணியை பச்சை நிற ரசாயனத்தில் முக்கி எடுத்து விற்பவர்கள் தானே நமது வியாபாரிகள். அப்ப இந்த வாழைப்பழ மோசடியும் அரங்கேற வாய்ப்பிருக்கு.