வாழத்தகுந்த நகரங்களின் சர்வதேச பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்ட இந்திய நகரங்கள்!

 

வாழத்தகுந்த நகரங்களின் சர்வதேச பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்ட இந்திய நகரங்கள்!

உலக நாடுகளில் உயர்ந்த வாழ்க்கை தரத்துடன் வாழத்தகுந்த நகரங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது

புதுதில்லி: உலக நாடுகளில் உயர்ந்த வாழ்க்கை தரத்துடன் வாழத்தகுந்த நகரங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

Mercer Quality of Life survey எனப்படும் நிறுவனம், 2019-ஆம் ஆண்டுக்கான உலகின் வாழத்தகுந்த நகரங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டது. குற்றம், அரசியல் நிலைத்தன்மை, பொருளாதாரம், சுகாதாரம், குடியிருப்பு, கல்வித்தரம், உள்கட்டமைப்பு, ஓய்வு நேரம், காற்று மாசு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனி மனித பாதுகாப்பு, உள்ளூர் சட்ட அமலாக்கப்பிரிவின் செயல்திறன், மற்ற நாடுகளுடனான நல்லுறவு, குற்ற அளவுகள், பத்திரிகை சுதந்திரம் போன்ற அம்சங்களும் கூடுதலாக ஆய்வில் சேர்க்கப்பட்டிருந்தது.

மொத்தம் 231 நகரங்கள் குறித்த ஆய்வு முடிவுகளில், புதுதில்லிக்கு 162-வது இடம், கொல்கத்தாவுக்கு 160-வது இடம், சென்னைக்கு 151-வது இடம், பெங்களூருவுக்கு 149-வது இடம், புனேவுக்கு 143-வது இடம், ஹைதராபாத்துக்கு 143-வது இடமும் கிடைத்து சர்வதேச அளவில் இந்திய நகரங்கள் பின்னடைவை சந்தித்துள்ளன.

இந்த ஆய்வில் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு 226-வது இடமும், பொருளாதாரம், பாதுகாப்பு, சமூக பிரச்சனைகள் காரணமாக ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு கடைசி இடமும் கிடைத்துள்ளது.