வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராபர்ட் இகர் பதவி விலகல்

 

வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராபர்ட் இகர் பதவி விலகல்

வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராபர்ட் இகர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ்: வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராபர்ட் இகர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ராபர்ட் இகர் பதவி வகித்து வந்தார். இந்த நிறுவனத்தின் 7வது தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2005-ஆம் ஆண்டு அவர் பொறுப்பேற்றார். இவரது பதவி காலத்தில் பிக்சர் அனிமேஷன் ஸ்டூடியோவை டிஸ்னியுடன் இணைத்தது, மார்வெல், லூக்காஸ், 21 செஞ்சுரி பாக்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களை வாங்கியது என டிஸ்னியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

TTN

அத்துடன் டிஸ்னி பிளஸ் ஸ்டிரீமிங் தளத்தை அறிமுகப்படுத்தியதும், சில மாதங்களிலேயே 28 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டு வந்ததிலும் இவரது பங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், வால்ட் டிஸ்னியின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து ராபர்ட் இகர் பதவி விலகியுள்ளார். அவரது இந்த முடிகு டிஸ்னி நிறுவனத்திற்கு மிகவும் பேரிழப்பு என்று ஹாலிவுட் சினிமா வல்லுநர்கள் கூறியுள்ளனர்.