வாலாட்டாதீங்க… ஒட்ட நறுக்கிடுவோம்.! மிரட்டும் கிருஷ்ணசாமி மகன்… வாங்க வந்து நறுக்கிதான் பாருங்க… கலாய்க்கும் திமுக எம்.பி

 

வாலாட்டாதீங்க… ஒட்ட நறுக்கிடுவோம்.! மிரட்டும் கிருஷ்ணசாமி மகன்… வாங்க வந்து நறுக்கிதான் பாருங்க… கலாய்க்கும் திமுக எம்.பி

sktwitter

தர்மபுரி திமுக எம்.பி செந்தில் எப்போதும் அவருடைய ட்விட்டர் ஏதேனும் கருத்துக்களை பதிவிட்டு, வேலியில் போகும் ஓநாயை வேட்டியில் விட்டுக்கொள்வார். 

shyam krishnasamy

சமீபத்தில் புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பேசிய வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த செந்தில், சாதியை குறித்து பேசும் கிருஷ்ணசாமியை வம்புக்கு இழுத்தார். இதனை பார்த்த கிருஷ்ணசாமி மகன், ஷியாம், உங்க மனைவி எந்த சாமி? உங்க குடும்பத்துல எத்தன பேர் கலப்பு திருமணம்? சாதி ஒழிய கலப்பு திருமணம் செய்ய சொல்லி ஊருக்கு உபதேசம் செய்யும் திமுக எம்.பிக்கள் சொந்த குடும்பத்தில் எத்தனை கலப்பு திருமணங்கள் செய்துள்ளீர்கள்? மத்தவன் அடிச்சிகிட்டு சாகனும், நீங்க சொந்த சாதியிலேயே வசதி இருப்பீங்க என செந்திலுக்கு பதிலடி கொடுத்தார். மேலும் “SC என்பது எங்களுக்கு கறை தான்! பின்ன என்ன பெருமையா? பெருமையா நினைக்கிறவன் அவனவன் பெயருக்கு முன்னாடியோ, பின்னாடியோ SC என்று போட்டு அடையாளப்படுத்திக்கொள்ளட்டுமே. எங்களுக்கு சுயமரியாதை இருக்கு. அது உங்களுக்கு RSS சித்தாந்தமா தெரியுது!” என குறிப்பிட்டிருந்தார். 

senthilkumar mp dmk

உடனே பொங்கி எழுந்த எம்.பி. செந்தில்குமார்,  “SC என்பதுகறை என்றால் ஷியாம் வரும் 2021 தேர்தலில் உங்கள் கட்சி ரிசர்வ் தொகுதியில் இனி நிற்க மாட்டோம் என்று உறுதிபட கூறமுடியுமா…. இது நாள் வறை பெற்ற உரிமைகள் இனி வேண்டாம் என்று சொல்ல முடியுமா.,பெற்ற படிப்பு/வேலை சலுகைகள் திரும்பப் தருவதற்கு நீங்கள் தயாரா” என ஷியாமிற்கு கேள்வி எழுப்பினார். 

இதற்கு ஷியாம், “சலுகைகளை திருப்பி தர தயார் என எப்பவோ சொல்லிவிட்டோம். சரி நீங்க வன்னியரே இல்லாத தொகுதியில் போட்டியிட தயாரா? ஆ. ராசாவுக்கு சொந்த தொகுதி குடுக்கவில்லை? கனிமொழி நாடார் சாதி பாசத்தில் தான் தூத்துக்குடியில் நின்றார்? திமுக இனி சாதி பார்க்காமல் வேட்பாளரை நிறுத்தும் என உறுதி அளிக்க முடியுமா? முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா ஏன் தனது சொந்த பெரம்பலூர் தொகுதி பொது தொகுதியானாலும், நீலகிரிக்கு மாற்றப்பட்டார்? மூன்று முறை வென்ற தொகுதி என்றாலும் கூட பொது தொகுதியில் போட்டியிட தடையா?” நான் விவாதிக்க தயார்… ஸ்டாலின் அல்லது உதயநிதியிடம் கேட்டு சொல்லுங்க. தயார் என்றால் நாங்களே செலவு ஏற்பாடு எல்லாம் பார்த்துகொள்கிறோம். திமுகவுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் விவாதம் நடத்த கூட சம்மதம் தான்” எனக்கூறினார். 

அதற்கு பதிலளித்த செந்தில், “நான் டிவியில் விவாதிக்க தயார்” என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து ஷியாம் கிருஷ்ணசாமி, திமுக எம்.பி. செந்தில் எங்களிடம் வால் ஆட்டினால் ஒட்ட நறுக்கப்படும், விவாதத்தை துவங்கியது நீங்கள்,…நான் நீங்க கேட்ட கேள்விக்கு பதிலும் கொடுத்துவிட்டேன்… உங்கள காணவில்லை” என தெரிவித்தார். 
இதற்கு பதில் பேசாத எம்.பி. செந்திலை சீண்டிய ஷியாம், “மக்கள் பிரதிநிதியா இருந்துகிட்டு கேள்வி கேட்டல் பிளாக் செய்வதும், பதில் இல்லையென்றால் சுந்தர் சி பாணியில் டிவி விவாதத்தில் பதில் சொல்கிறேன் என்பது நீங்க எப்பவும் செய்வது தான? உங்க விமர்சனத்துக்கு நான் கேட்பது எல்லாம் மிக சாதாரணமான கேள்விகள் தான்… ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லலலே

இதற்கு எம்.பி. செந்தில், “Wow!Just luv this guy… ஷியாம் விவாதத்திற்கு வர தைரியம் இல்ல…. இதில் comedy”வால் ஆட்டுதலை வட மாவட்ட  மருத்துவரோடு வச்சுக்கோங்க
இங்க ஒட்ட நறுக்கப்படும்” தோழர் ஷியாம்.. #தைரியம் இருந்தால் டிவி விவாதத்திற்கு வாருங்கள் அங்க வந்து வால நறுக்கி காட்டுங்கள்?. திமுககாரன் கிட்டயே வா” என ட்வீட் பதிவிட்டுள்ளார். 

இப்படி இருவருக்குமிடையே ட்விட்டர் போர் நீண்டுகொண்டே செல்கிறது.