வார்ட் பெயருடன் கட்டு கட்டாக பணம்; துரைமுருகன் தரப்பு மீது சந்தேகம்?! – வீடியோ

வார்ட் பெயருடன் கட்டு கட்டாக பணம்; துரைமுருகன் தரப்பு மீது சந்தேகம்?! – வீடியோ

தனியார் கல்லூரி பற்றி எந்த விவரங்களையும் வெளியிடாத வருமான வரித்துறை, துரைமுருகன் தரப்பு மீது சந்தேகிப்பதாக தெரிகிறது! வார்ட் பெயருடன் எக்கச்சக்கமான 200 ரூபாய் கட்டுகள் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் தனியார் கல்லூரியில் இருந்து சிமெண்ட் குடோனுக்கு மாற்றப்பட்ட கட்டு கட்டான பணத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

துரைமுருகன் உடைமைகளில் ரெய்ட்

வரி

திமுக பொருளாளர் துரைமுருகன் உடைமைகளில் சில தினங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

துரை

இதுகுறித்து துரைமுருகன், என் மகன் கதிர் ஆனந்த்க்கு வெற்றி வாய்ப்பு அதிகமாய் இருப்பதை அறிந்துகொண்டு மத்திய, மாநில அரசுகள் கூட்டு சேர்ந்து இந்த செயலை செய்து வருகின்றனர். இந்த ரெய்டை கடந்த மாதம் நடத்தியிருக்கலாம், நாங்கள் தேர்தல் பணியில் மும்மரமாக இருக்கும் வேளையில் இவ்வாறு செய்திருக்கின்றனர் என குற்றம்சாட்டினார்.

கட்டுக் கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட பணம்

கடந்த மார்ச் 29 – 30ஆம் தேதி வாக்கில், வருமான வரித்துறையினர் அதிரடியாக நடத்திய சோதனையில் கட்டு கட்டாக பணம் சிக்கியுள்ளது. தனியார் கல்லூர் ஒன்றில் இருந்து சிமெண்ட் குடோனுக்கு எடுத்துச் செல்லும்போது இந்த பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.